300 வரும்.. ஐபிஎல்ல அந்த நியாயமே இல்ல.. பேசாம கிரிக்கெட்டை இந்த பெயரில் மாத்திடுங்க.. .. ராபடா அதிருப்தி

Kagiso Rabada
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக ஐபிஎல் என்பது அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. ஏனெனில் ஒரு காலத்தில் 50 ஓவரில் 250 ரன்கள் அடிப்பதே சவாலாக இருந்தது. ஆனால் ஐபிஎல் வந்தது முதல் எளிதாக 20 ஓவரில் 200 ரன்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

போதாக்குறைக்கு தற்போது சிறிய பவுண்டரிகள், ஃபிளாட்டான பிட்ச்சுகள், இம்பேக்ட் வீரர் விதிமுறை போன்றவை பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கிறது. அதைப் பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி வருகிறார்கள். குறிப்பாக ஹைதராபாத் மட்டும் கடந்த 2 வருடங்களில் 2 முறை 280+ ரன்களை அடித்து ஐபிஎல் வரலாற்றின் டாப் 5இல் 4 ஸ்கோர்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

பெயரை மாத்துங்க:

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பேட்டிங், பௌலிங் ஆகிய இரண்டுக்கும் நியாயமான சமமான நிலை இல்லை என்று தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த குஜராத் அணியின் வீரர் ககிஸோ ரபாடா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே விரைவில் 300 ரன்கள் அடிப்பதைப் பார்க்க முடியும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்த விளையாட்டு ஏதோ ஒரு வழியில் முன்னேற்றமடைய வேண்டும்”

“ஆனால் அதற்காக ஒவ்வொரு போட்டியிலும் அது ஃபிளாட்டாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதில் வேடிக்கையை நான் வெளியே எடுக்கிறேன். ஏனெனில் இப்படியே சென்றால் நம்முடைய விளையாட்டை நீங்கள் கிரிக்கெட் என்று அழைக்க முடியாது. பேட்டிங் என்று அழைக்கக்கூடும். சாதனைகள் முறியடிக்கப்படுவதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை”

- Advertisement -

ராபடா அதிருப்தி:

“சாதனைகள் உடைக்கப்படக்கூடியது. அது பரவாயில்லை. அதிகபட்ச ஸ்கோர்கள் அடிக்கப்படும் போட்டிகள் நல்லது. அதற்கு நிகராக குறைந்தபட்ச ஸ்கோர்கள் அடிக்கப்படும் போட்டிகளும் இருக்க வேண்டும். வியத்தகு முறையில் நீங்கள் இருபுறமும் இழுக்க முடியாவிட்டாலும் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் இடையில் ஒரு சமநிலை பராமரிக்கப்பட வேண்டும்”

இதையும் படிங்க: அஷுதோஷ் சர்மாவுக்கு அந்த வாய்ப்பு மட்டும் கெடச்சா கப் டெல்லி அணிக்கு தான் – சிறுவயது கோச் அதிரடி

“அதே சமயம் இங்கே உட்கார்ந்து கொண்டு புகார் செய்ய முடியாது. பௌலராக அசத்துவதற்கு ஏதேனும் வழியைக் கண்டறிய வேண்டும். ஆனால் அனைத்து நேரங்களிலும் அதிக ஸ்கோர்களை பார்ப்பது இந்த உலகிற்கு ஒரு கட்டத்தில் அலுப்பைக் (போரிங்) கொடுக்கும். பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமநிலை இருக்கும் போட்டிகளே சுவாரசியமாக இருக்கும்” என்று கூறினார். மேலும் ஐபிஎல் தொடரில் பந்தில் சலிவாவை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு ரபாடா வரவேற்பு தெரிவித்துள்ளார். பேட்ஸ்மேன்கள் அதிரடிக் காட்டுவதை தடுக்க யார்க்கர் போன்ற திறமைகளை வளர்ப்பது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement