கடந்த சில நாட்களுக்கு முன்னர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சாத்தியமே இல்லாத போட்டியில் வெற்றி பெற்று அசத்தியிருந்தது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த அந்த நான்காவது லீக் கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ அணி 209 ரன்கள் குவித்தது. பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து படுமோசமான சரிவை சந்தித்தது.
அஷுதோஷ் சர்மாவிற்கு இந்த வாய்ப்பு குடுங்க : சிறுவயது பயிற்சியாளர் கருத்து
அதோடு ஒரு கட்டத்தில் 65 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து மேலும் சரிவை சந்தித்ததால் நிச்சயம் அந்த போட்டியில் டெல்லி அணி தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிகட்டத்தில் எட்டாவது வீரராக களம்புகுந்த அஷுதோஷ் சர்மா 31 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் என ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் குவித்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
அவரது இந்த சிறப்பான அதிரடி ஆட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தது. இந்நிலையில் அஷுதோஷ் சர்மாவின் திறன் பற்றி பேசியுள்ள அவரது சிறுவயது பயிற்சியாளர் அஷுதோஷ் சர்மாவிற்கு துவக்க வீரருக்கான வாய்ப்பு கிடைத்தால் டெல்லி அணி இம்முறை கோப்பையை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : அஷுதோஷ் சர்மாவிடம் இருக்கும் திறமையை நான் சிறுவயதில் இருந்தே பார்த்து வருகிறேன். தொடர்ச்சியாக ரன் குவிக்க வேண்டும் என்கிற வேட்கையுடன் விளையாடுபவர். ஏற்கனவே நான் அவரை பயிற்றுவித்தலில் இருந்து அவருடைய பலம் என்ன என்பது எனக்கு தெரியும்.
அவரை துவக்க வீரராக களம் இறக்கினால் நிச்சயம் அவர் பவர்பிளே ஓவர்களில் மிகச் சிறப்பாக விளையாடுவார். அதுமட்டுமின்றி பௌலர்களுக்கும் அவர் ஒரு ஆபத்தான வீரராக இருப்பார். அவர் மட்டும் துவக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாட ஆரம்பித்து விட்டால் அவரை கண்ட்ரோல் செய்வது மிகவும் கடினம். மிகப் பெரிய சிக்சர்களை அடிக்கும் பலமும் அவரிடம் இருக்கிறது.
இதையும் படிங்க : ஜெயிச்சதோடு மட்டுமில்லாமல் அகமதாபாத் மைதானத்தில் சாதனையையும் நிகழ்த்திய – பஞ்சாப் கிங்ஸ்
எனவே இந்த தொடரில் அவரை துவக்க வீரராக அக்சர் பட்டேல் அனுப்பினால் இம்முறை டெல்லி அணி தங்களது முதல் ஐபிஎல் கோப்பை கைப்பற்றும் வாய்ப்பும் கிடைக்கும் என சிறுவயது பயிற்சியாளர் கூறியது குறிப்பிடத்தக்கது.



