வார்னே மாதிரி 9.75 கோடி அஸ்வினுக்கு மரியாதை போச்சு.. இதை செய்யலன்னா பெயர் வேஸ்ட்.. மைக்கேல் வாகன்

Micheal Vaughan
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக வென்றது. ஆனால் பெங்களூரு மற்றும் ராஜஸ்தானுக்கு எதிரானப் போட்டிகளில் சென்னை அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது. அதன் காரணமாக எம்எஸ் தோனி உட்பட அந்த அணியின் சீனியர் வீரர்கள் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் 9.75 கோடிகளுக்கு வாங்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். 2010, 2011 ஐபிஎல் கோப்பைகளை தோனி தலைமையில் சென்னை வெல்ல முக்கிய பங்காற்றிய அஸ்வின் 2015 முதல் வேறு ஐபிஎல் அணிகளில் விளையாடி வந்தார். அந்த நிலையில் 10 வருடங்கள் கழித்து மீண்டும் தமது பழைய அணிக்கு அஸ்வின் விளையாடுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

சுமாரான அஸ்வின்:

சொல்லப்போனால் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 2வது அதிக விக்கெட் எடுத்த ஜாம்பவான் வீரராக அஸ்வின் அறியப்படுகிறார். இருப்பினும் அப்படிப்பட்ட அவர் 2025 ஐபிஎல் சீசனில் 9.90 எக்கனாமியில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து ஒரே மாதிரியாக பவுலிங் செய்வதால் எதிரணி பேட்ஸ்மேன்கள் மரியாதை கொடுக்காமல் அடிப்பதாக மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். எனவே எவ்வளவு பெரிய பெயரைக் கொண்டிருந்தாலும் பேட்ஸ்மேன்கள் மதிக்க அஸ்வின் சிறப்பாக பவுலிங் செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது பற்றி வாகன் பேசியது பின்வருமாறு. “சில வருடங்களுக்கு முன்பாக அஸ்வின் மீது நிறைய மரியாதை காண்பிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். அஸ்வினிடம் நிறைய விக்கெட்டுகளை கொடுக்காமல் 24 – 28 ரன்கள் அடித்தாலே போதும் என்று பேசுவார்கள். ஆனால் தற்போது அந்த நிலைமை இல்லை. மாறாக அவரை எப்படி டேமேஜ் செய்யலாம்? என்று பேசுகின்றனர்”

- Advertisement -

பெயர் முக்கியமல்ல:

“எப்படி அவரை அடித்து நொறுக்கலாம் என்று யோசிக்கின்றனர். கடந்த பல வருடங்களில் அவருடைய அனைத்து விதமான பந்துகளையும் எதிரணிகள் பலவிதங்களாக பார்த்ததே இதற்கு காரணமாகும். தற்போது மனதளவில் வித்தியாசமான அணுகுமுறை இருக்கிறது. பந்து அடிக்கக்கூடிய இடத்தில் இருந்தால் யார் என்பதைப் பற்றி கவலைப்படாமல் அடிக்கலாம் என்று எதிரணிகள் நினைக்கின்றனர்”

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணி இப்படி ஆடுறத பாக்க கஷ்டமா இருக்கு.. குறிப்பா இந்த வீக்னஸ் ரொம்ப மோசம் – அம்பத்தி ராயுடு கருத்து

“அது யார் என்றும் பவுலர் பெயர் என்ன என்பது பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. பொதுவாக நாங்கள் பவுலரை பார்க்காமல் பந்தை பார்த்து அடியுங்கள் என்று சொல்வோம். ஷேன் வார்னேவை எதிர்கொள்ள இங்கிலாந்து அணியில் இப்படி தான் பேசுவோம். பவுலரை பார்க்காமல் பந்தை மட்டும் பாருங்கள் என்று பேட்ஸ்மேன்களிடம் பேசி சமாளிப்பது கடினமானது. ஆனால் இப்போதுள்ள பேட்ஸ்மேன்கள் பவுலர்களின் பெயரைப் பார்த்து அடித்து நொறுக்குகின்றனர்” என்று கூறினார்.

Advertisement