- Advertisement -
ஐ.பி.எல்

எப்போது தோனி மீண்டும் சி.எஸ்.கே அணியின் பிளேயிங் லெவனுக்கு திரும்புவார் – உண்மையை சொன்ன ஹஸி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக சி.எஸ்.கே அணியுடன் இணைந்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வந்தார். ஆனால் இந்த தொடரானது ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் அவர் விளையாட முடியாமல் போனது. தற்போது 46 வயதாகும் தோனிக்கு இதுவே கடைசி ஐ.பி.எல் தொடராக பார்க்கப்படுகிறது.

தோனி எப்போது பிளேயிங் லெவனுக்கு திரும்புவார் :

இவ்வேளையில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக முதல் 7 போட்டிகளை தவற விட்டுள்ள அவர் எப்போது அணிக்கு திரும்புவார்? என்கிற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்பொழுது தோனி மெல்ல மெல்ல வலைப்பயிற்சியை துவங்கி பேட்டிங் செய்வதும், விக்கெட் கீப்பிங் செய்வதும் குறித்த காட்சிகள் வெளியாகி வரும் வேளையில் விரைவில் தோனி சி.எஸ்.கே அணியில் இணைந்து விளையாடலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 100% உடற்தகுதியை அவர் எட்டவில்லை என்பதனால் அவர் விளையாடவில்லை. இவ்வேளையில் தோனி எப்போது மீண்டும் பிளேயிங் லெவனுக்கு திரும்புவார்? என்பது குறித்த தகவலை பேட்டிங் பயிற்சியாளரான மைக்கல் ஹசி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : தோனி தற்போது காயத்திலிருந்து மிக வேகமாக மீண்டு வருகிறார். அவர் களத்திற்கு திரும்ப தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் என்பது எங்களுக்கு தெரியும். ஆனாலும் அவர் மைதானத்தின் இடையே விரைவாக ஓடும் திறன் கொண்டவர். எனவே 100% உடற்தகுதியை எட்டிய பின்னர் தான் அவர் விளையாடுவார். எனவே அவர் அணிக்கு திரும்ப இன்னும் சில போட்டிகள் ஆகலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : கிளென் மேக்ஸ்வெல்லை பின்னுக்கு தள்ளி வரலாற்று சாதனையை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ

அதேபோன்று தோனி மீண்டும் அணிக்குள் வரும்போது நிச்சயம் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று உறுதியான நம்புகிறேன். அதேபோன்று கடைசி நேரத்தில் அவர் பேட்டிங் செய்யும்போது அடிக்கடி ரன் ஓட வேண்டிய அவசியம் வருவதால் நிச்சயம் 100% உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே அவர் பிளேயிங் லெவனில் விளையாடுவார் என மைக்கல் ஹசி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -