தோனி ரிட்டயர்டு ஆகக்கூடாது. இந்த 2 தொடரில் முடிவு தெரியும் – மைக் ஹஸ்ஸி அதிரடி

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி வீரரான மைக்கல் ஹஸ்ஸி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணியில் 2008ஆம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை துவக்க வீரராக விளையாடி வந்தார். பின்பு 2015ஆம் ஆண்டு வரை மற்றொரு அணிக்காக விளையாடிய மைக்கல் ஹஸ்ஸி 2015 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது தான் தோனி தலைமையில் விளையாடிய தருணங்கள் பற்றியும் தோனியின் ஓய்வு குறித்து அவர் தனது கருத்தினை சமூக வலைதளம் மூலமாக வெளியிட்டுள்ளார். அதன்படி தனியார் இணையதள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மைக்கல் ஹஸ்ஸி பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்தார். அதில் தோனி குறித்து அவர் கூறுகையில் :

நான் இந்திய அணியின் தேர்வாளர் கிடையாது இருப்பினும் தோனி இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். அவர் நீண்ட நாட்களாக அணியில் இடம்பெறாமல் இருப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு அணியின் சாதனை நாயகர்களை வலுக்கட்டாயமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வைப்பது முற்றிலும் தவறு.

dhoni with pant

இந்திய அணியின் கேப்டனாக தோனி பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார் என்று மைக்கல் ஹஸ்ஸி கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசுகையில் : தோனி இன்றுவரை இளமையாகவே இருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பினாலும் சிறப்பாக விளையாட வேண்டிய அனைத்து நுணுக்கங்கள் மற்றும் கிரிக்கெட் குறித்த அறிவு அவருக்கு அதிகம் எனவே அவர் மீண்டும் எளிதில் பழைய நிலைக்கே திரும்பி விட முடியும்.

- Advertisement -

தோனி மிகவும் திறமையான கிரிக்கெட் வீரர் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் போது எந்த சிக்கலையும் சந்திக்காமல் எளிதாக சிறப்பாக விளையாட முடியும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தோனி இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப அவர் உடல் ஆரோக்கியம் மற்றும் மன உறுதி இரண்டும் சிறப்பாக இருக்கிறது.

dhoni

தோனி மட்டும் நம்பினால் அவரால் நிச்சயம் இந்தியாவிற்கு நீண்ட நாட்கள் விளையாட முடியும். அதற்கு உண்டான அனைத்து திறமைகளும் அவரிடம் உள்ளது. தற்போது நீண்ட இடைவெளி அவருக்கு கிடைத்திருப்பதால் மனதளவில் புத்துணர்வுடன் இருப்பார். அவர் வரும் ஐபிஎல் போட்டிகளில் அல்லது உலகக் கோப்பை டி20 தொடரில் விளையாடும் பட்சத்தில் அவை அனைத்தையும் அவர் நிரூபிப்பார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement