ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே அணியானது 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து இன்று சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணிக்கெதிரான போட்டியில் விளையாடயிருக்கிறது.
எம்.எஸ் தோனியின் வருகை குறித்து பேசிய : மைக்கல் ஹசி
இந்த போட்டியிலாவது எம்.எஸ் தோனி விளையாடுவாரா? என்பது தான் பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் இந்த 2026 ஐ.பி.எல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக கணுக்கால் தசைப்பிடிப்பு காரணமாக தோனி காயத்தை சந்தித்தார். அதனால் இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளை அவர் தவறவிடுவார் என்று சி.எஸ்.கே அணியின் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
அந்தவகையில் இதுவரை சி.எஸ்.கே அணி விளையாடியுள்ள 8 போட்டிகளை அவரை தவறவிட்டுள்ளார். இந்நிலையில் எஞ்சியுள்ள சில ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நிலை இருப்பதால் இந்த சூழலில் அனுபவம் வாய்ந்த வீரரான தோனி அணியில் இருப்பது முக்கியம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தோனி பயிற்சியின் போது வீரர்களுடன் இணைந்து இருந்தாலும் போட்டியின் போது ஏன் மைதானத்திற்கு வருவதில்லை என்பது குறித்து சி.எஸ்.கே அணியின் பேட்டிங் கோச் மைக்கல் ஹசி சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தவகையில் அவர் கூறியதாவது : தோனி தற்போது நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளார். அவர் விரைவில் அணிக்கு திரும்புவார். அவரது ஆட்டத்தை காண ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க : மெகா சாதனையுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய டெல்லி கேபிட்டல்ஸ் – விவரம் இதோ
தோனி எப்போதுமே அணியின் நலனுக்கு முக்கியத்துவம் குடுக்கக்கூடியவர். தான் மைதானத்திற்கு வந்தால் கேமரா மற்றும் ரசிகர்களின் பார்வை பெரும்பாலும் தன் மீதே இருக்கும் என்பதை உணர்ந்த அவர் அதனால் மற்ற வீரர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படக்கூடாது என்பதற்காகவே மைதானத்திற்கு வருவதை தவிர்க்கிறார் என்றும் மைக்கல் ஹசி கூறியது குறிப்பிடத்தக்கது.



