இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 43 ஆவது லீக் போட்டியானது ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
சாதனையுடன் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி :
அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக ரியான் பராக் 90 ரன்களையும், டோனவன் பெரேரா 47 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 226 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 226 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
அதிலும் குறிப்பாக இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 19 ஆண்டுகால சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது. அதாவது இதுவரை டெல்லி அணி சேசிங் செய்ததிலேயே இதுதான் மிகப்பெரிய இலக்கு. எனவே இதுவே ஐ.பி.எல் வரலாற்றில் டெல்லி அணி வெற்றிகரமாக சேசிங் செய்த அதிகபட்ச ஸ்கோராகவும் மாறியுள்ளது.
இதையும் படிங்க : 4 ஆவது முறையாக ஐ.பி.எல் போட்டியின் முதல் பந்தில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் செய்த சம்பவம் – விவரம் இதோ
இந்த வெற்றியின் மூலம் நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் 9 ஆட்டங்களில் விளையாடி 4 ஆவது வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது. அதோடு தங்களது பிளே ஆப் வாய்ப்பையும் உயிர்ப்புடன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



