இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டியானது மே ஒன்றாம் தேதியான இன்று ஜெயப்பூர் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சொந்த மண்ணில் நடைபெறும் போட்டி என்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கூடுதல் சாதகம் அமைய வாய்ப்புள்ளது.
4 ஆவது முறையாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நிகழ்த்திய சாதனை :
அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தற்போது பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது துவக்க வீரராக விளையாடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார்.
இருந்தாலும் 3 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்த வேளையில் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார். இந்த போட்டியின் முதல் பந்தில் சிக்ஸ் அடித்ததன் மூலம் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அதாவது ஐ.பி.எல் போட்டிகளில் போட்டியின் முதல் பந்தில் இன்றுடன் சேர்த்து நான்கு முறை சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்து பிரியான்ஷ் ஆர்யா இரண்டு முறை போட்டியின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்திருந்த வேளையில் ஜெய்ஸ்வால் மட்டுமே நான்கு முறை முதல் பந்தில் சிக்ஸ் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவின் மெகா ரெக்கார்டை உடைத்து வரலாறு படைக்க காத்திருக்கும் – வைபவ் சூர்யவன்ஷி
இவர்கள் இருவரை தவிர்த்து பல வீரர்கள் ஒருமுறை முதல் பந்தில் சிக்ஸ் அடித்து இருந்தாலும் அதனை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு வழக்கமாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



