நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியானது நேற்று முன்தினம் கவுகாத்தி நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய வேளையில் அந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே வெற்றியை பதிவு செய்தது.
சி.எஸ்.கே அணியின் தோல்விக்கு இதுவே காரணம் : மைக்கல் ஹசி
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணி ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களில் இலக்கினை எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த தோல்விக்கு பிறகு சென்னை அணி தோல்வியை சந்திக்க என்ன காரணம்? என்பது குறித்து பேசிய பேட்டிங் பயிற்சியாளரான மைக்கல் ஹசி கூறியதாவது : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எங்களை முழுமையாக இந்த ஆட்டத்தில் இருந்து தோற்கடித்து விட்டது. டாஸ் வென்றது அவர்களுக்கு ஒரு நல்ல விஷயம். ஏனெனில் ஆடுகளம் சில நாட்களாக மூடப்பட்டிருந்த வேளையில் ஈரப்பதம் காரணமாக பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்தது.
போட்டியின் ஆரம்பத்திலேயே நாங்கள் விக்கெட்டுகளை இழந்ததால் போட்டி எங்களிடம் இருந்து சென்றுவிட்டது. போட்டியின் ஆரம்பத்திலேயே பவர்பிளே ஓவர்களில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழக்கும் பட்சத்தில் பார்ட்னர்ஷிப் அமைப்பது முக்கியம். ஆனால் இந்த மைதானத்தின் சூழலை கணிக்காமல் பேட்ஸ்மேன்கள் செய்த தவறே தோல்விக்கு காரணமாக பார்க்கிறேன்.
இதையும் படிங்க : வருண் சக்கரவர்த்தி அவரோட ஸ்கில்ஸ்ஸ டி20 வேர்ல்டுகப்ல சரியா யூஸ் பண்ணல – அமித் மிஸ்ரா கருத்து
மைதானத்தின் தன்மையை புரிந்து கொண்டு வேறு வழியில் ரன் சேர்க்க முயற்சித்து இருந்தால் நிச்சயம் வேறு மாதிரி இருந்திருக்கும். இந்த தோல்வியிலிருந்து நிறைய பாடங்களை எங்களது அணியின் வீரர்கள் கற்றுக் கொள்வார்கள். இந்த தோல்வியை பின்னுக்கு தள்ளிவிட்டு அடுத்த போட்டிக்காக தயாராக இருக்கிறோம் என மைக்கல் ஹசி கூறியது குறிப்பிடத்தக்கது.



