வருண் சக்கரவர்த்தி அவரோட ஸ்கில்ஸ்ஸ டி20 வேர்ல்டுகப்ல சரியா யூஸ் பண்ணல – அமித் மிஸ்ரா கருத்து

Amit Mishra and Varun
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரினை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடியிருந்த இந்த தொடரில் ஒரே ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்த இந்திய அணி இறுதியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

வருண் சக்கரவர்த்தி திறனை சரியாக பயன்படுத்தல : அமித் மிஸ்ரா

இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக ஜஸ்ப்ரீத் பும்ராவுடன் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தியும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். ஆனாலும் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அவரது பந்துவீச்சில் அதிகளவில் ரன்களை விட்டுக்கொடுத்து சற்று ஏமாற்றத்தை அளித்திருந்தார்.

- Advertisement -

ஏனெனில் மிஸ்ட்ரி பந்துவீச்சாளரான அவரது பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் கணித்து அடிப்பது கடினமாக இருந்தது. ஆனால் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் அவரை எளிதாக பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாடினர். இந்நிலையில் வருண் சக்கரவர்த்தியின் ஸ்கில் டி20 உலக கோப்பை தொடரின் போது சரியாக பயன்படுத்தப்படவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரான அமித் மிஸ்ரா சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் வருண் தனது திறன்களை சரியாக பயன்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் அவரது பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் முன்கூட்டியே கணித்து விட்டனர். அதுமட்டும் இன்றி அவர் சற்று வேகமாகவும் பந்துவீச ஆரம்பித்து விட்டார். அது அவருடைய ஸ்ட்ரென்த் கிடையாது. பந்தை இன்னும் ஸ்லோவாக வீச வேண்டும். அவரிடம் இருக்கும் வெரைட்டிக்கு நிச்சயம் பொறுமையாக பந்து வீசினால் பேட்ஸ்மேன்கள் கணிப்பது கடினமாக இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : காயமடைந்த எம்.எஸ் தோனி எப்போது மீண்டும் சி.எஸ்.கே அணிக்கு திரும்புகிறார்? – வெளியான தகவல்

ஆனால் அவர் கூடுதல் வேகத்துடன் பந்து வீசுவதால் பேட்ஸ்மேன்களும் எளிதாக லைனை பிடித்து அவரை அடித்து விளையாடுகின்றனர். எனவே இதை மாற்றிக்கொண்டு மீண்டும் அவர் தன்னுடைய பாணியில் பொறுமையாக பேட்ஸ்மேன்களை குழப்பம் வகையில் பந்துவீச வேண்டும் என அமித் மிஸ்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement