காயமடைந்த எம்.எஸ் தோனி எப்போது மீண்டும் சி.எஸ்.கே அணிக்கு திரும்புகிறார்? – வெளியான தகவல்

MS Dhoni
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரோடு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது 44 வயதாகும் தோனி கடந்த சில ஆண்டுகளாகவே முழு உடற்தகுதி இல்லாமல் தடுமாறி வருகிறார். அதோடு சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் இருந்து டிரேடிங் முறையில் சி.எஸ்.கே அணிக்கு கொண்டுவரப்பட்டது தோனியின் இடத்தை நிரப்பதான் என்பதனால் நிச்சயம் அவர் இந்த ஆண்டுடன் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சி.எஸ்.கே அணிக்கு தோனி திரும்புவது எப்போது? :

இந்த 2026 ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்ட தோனி இம்முறை கடைசி தடவையாக சி.எஸ்.கே அணியில் விளையாடிவிட்டு ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டதால் ரசிகர்களும் அவரை அவரது ஆட்டத்தை காண காத்திருந்தனர்.

- Advertisement -

ஆனால் இந்த 2026 ஐபிஎல் தொடரானது துவங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் முதல் இரண்டு வாரங்கள் விளையாட மாட்டார் என்ற தகவலை சிஎஸ்கே அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது. இந்நிலையில் காயமடைந்த எம்.எஸ் தோனி எப்பொழுது மீண்டும் முழு உடற்தகுதியை எட்டி சிஎஸ்கே அணிக்கு திரும்புவார்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது :

அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை தவறவிட்ட தோனி அடுத்ததாக ஏப்ரல் 3-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியையும் தவறவிடுகிறார். அதன்பின்னர் பெங்களூருவில் நடைபெற இருக்கும் ஆர்.சி.பி அணிக்கு எதிரான போட்டியை தவறவிடும் அவர் அடுத்ததாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டியையும் தவறவிடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 6 ஆவது இந்திய வீரராக தேவையில்லாத மோசமான சாதனையில் இணைந்த அர்ஷ்தீப் சிங் – விவரம் இதோ

இப்படி தொடர்ச்சியாக நான்கு போட்டிகளை தவறவிடும் தோனி ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற இருக்கும் கொல்கத்தா நைட்ரஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது மீண்டும் சி.எஸ்.கே அணிக்கு திரும்பி விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இந்த தொடர் தான் தோனியின் கடைசி சீசன் என்பதினால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement