207 பந்துகளை சந்தித்து வெறும் 26 ரன்களை மட்டுமே அடித்தும் பட்லரை பாராட்டிய – மைக்கேல் ஹசி

Hussey
- Advertisement -

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியானது அந்நாட்டிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 16-ம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக துவங்கியது.

aus vs eng

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியை போன்றே இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி துவக்கத்திலிருந்தே ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. இந்த போட்டியின் முதலாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 473 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணி 236 ரன்களை மட்டுமே குவித்தது. அதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 230 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 468 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் இங்கிலாந்து அணி தங்களது இரண்டாவது இன்னிங்சில் 192 ரன்களை மட்டுமே குவிக்க மீண்டும் 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 2 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜாஸ் பட்லரை புகழ்ந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக 207 பந்துகளை சந்தித்து வெறும் 26 ரன்களை மட்டுமே அடித்த அவரை ஏன் புகழ்ந்துள்ளார் என்பதே இதில் சிறப்பான விடயம்.

buttler 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது ஒவ்வொரு பந்தையும் அடித்து விளையாடி மைதானத்திற்கு வெளியே அனுப்பிய பட்லர் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஏற்றவாறு அந்த பாணியை அப்படியே மாற்றி முழுக்க முழுக்க இங்கிலாந்து அணியை காப்பாற்ற தடுப்பாட்டம் விளையாடினார். எந்த ஒரு கட்டத்திலும் அவர் தனது பொறுமையை இழந்து பெரிய ஷாட்டுக்கு செல்லவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : தெ.ஆ ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள 3 இளம்வீரர்கள் – லிஸ்ட் இதோ

முடிந்த அளவிற்கு போட்டியை கொண்டு செல்ல வேண்டும் என்ற மிக கவனத்துடன் தெளிவான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் அதிரடியாக ஒயிட்பால் கிரிக்கெட்டில் விளையாடி வந்தாலும் மறுபக்கம் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது அவரது திறமைக்குச் சான்றாக அமைந்துள்ளது. அவரது இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் என பட்லரின் பேட்டிங்கை புகழ்ந்து மைக்கல் ஹசி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement