தெ.ஆ ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள 3 இளம்வீரர்கள் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி 26-ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு அந்நாட்டிற்கு பயணித்த வேளையில் தற்போது வரை இந்த தொடருக்கான ஒருநாள் அணி அறிவிக்கப்படவில்லை. மேலும் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தான் ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அவரும் தற்போது காயம் காரணமாக இந்தியாவில் உள்ளதால் ஒருநாள் தொடருக்கு திரும்புவாரா என்பதில் சந்தேகம் உள்ளது.

ind

இருப்பினும் தற்போது பெங்களூரில் சிகிச்சை பெற்று வரும் ரோஹித் நிச்சயம் ஒருநாள் தொடருக்கான அணியில் இணைவார் என்று கூறப்படுகிறது. மேலும் ஒருநாள் தொடருக்கான அணியும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதில் விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி வாய்ப்பு கிடைக்கும் வீரர்கள் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஒருநாள் தொடருக்காக தென்னாப்பிரிக்காவிற்கு புறப்படுவார்கள் என்றும் தெரிகிறது. அப்படி ஒருநாள் தொடருக்கான அணியில் வாய்ப்பை பெறவுள்ள மூன்று வீரர்கள்.

- Advertisement -

Gaikwad-2

1) ருதுராஜ் கெய்க்வாட் : ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி நடைபெற்று முடிந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய இவர் விஜய் ஹசாரே கோப்பையிலும் 5 போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் உடன் 603 ரன்கள் குவித்து அட்டகாசமான பார்மில் உள்ளதால் இவர் ஒருநாள் தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Venkatesh-iyer

2) வெங்கடேஷ் ஐயர் : வெங்கடேஷ் கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்தார். அந்த தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தற்போது நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே தொடரிலும் பேட்டிங்கில் சதம், பந்து வீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்துவது என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஏற்கனவே ஆல்ரவுண்டர் ஹார்டிக் பண்டியா தான் உடற்தகுதி பெறும் வரை தன்னை தேர்வு செய்யவேண்டாம் என்று கூறியிருப்பதால் ஆல்-ரவுண்டராக வெங்கடேஷ் ஐயர் ஒரு நாள் அணிக்கு தேர்வாக பிரகாசமான வாய்ப்புள்ளது.

Chahal

3) யுஸ்வேந்திர சாஹல் : கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வந்த சாஹல் தற்போது நடைபெற்று முடிந்துள்ள விஜய் ஹசாரே தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளதால் அவரும் இந்த தொடரில் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

Advertisement