தோனியிடம் இருக்கும் இந்த திறமை என்னிடம் இல்லை. நிச்சயம் அவர் இந்திய அணிக்காக விளையாடுவார் – மைக்கல் ஹஸ்ஸி நம்பிக்கை

Hussey
- Advertisement -

2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் பலருக்கு பல நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. வீரர்களுக்கு சம்பளம் கிடைக்காது. இதனை சார்ந்திருந்த கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம். இவ்வாறு ஒரு பக்கம் சென்றாலு,ம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் அவர் நன்றாக விளையாடி டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கலாம் என்று ஒரு திட்டம் தீட்டி வைத்திருந்தார். ஆனால், தற்போது இந்த ஐபிஎல் தொடரை கேள்விக்குறியாகியுள்ளது. மீண்டும் தோனி இந்திய அணியின் தேர்ச்சியுடன் களத்திற்கு வருவாரா என்பதும் சந்தேகமாகவே உள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும் ஆன மைக்கேல் ஹசி தோனியின் கிரிக்கெட் மறுபிரவேசம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கண்டிப்பாக தோனி சர்வதேச போட்டிகளில் ஆடும் அளவிற்கு உடல் திடத்துடன் இருக்கிறார். அவர் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று அவருக்கு மட்டும்தான் தெரியும்.

hussey

தோனி கிரிக்கெட் போட்டிகளை சரியாக கணிக்கும் திறன் கொண்டவர். ஒரு சில முறை போட்டிகளை சீக்கிரமாக முடித்துவிடலாம் என்று அவரிடம் கூறுவேன். ஆனால், அவர் வேண்டாம் என்பார் ஏனென்றால் எதிர் அணியின் பந்துவீச்சாளர்கள் நம்மை கணித்து விடுவார்கள் என்று கூறுவார்.

- Advertisement -

தோனி எப்போதெல்லாம் சிக்சர் அடிக்க நினைக்கிறாரோ அப்போதெல்லாம் அவரால் அடிக்க முடியும். அது போன்று திறமை என்னிடம் இல்லை என்று கூறி முடித்தார் மைக்கேல் ஹசி. ஹஸ்சி சென்னை அணிக்காக பல போட்டிகளில் தோனியின் கீழ் விளையாடி உள்ளார். மேலும் எப்போதும் தோனியின் பினிஷிங் மற்றும் கேப்டன்சி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்டாலும் இன்றளவும் சி.எஸ்.கே அணியுடன் தொடர்பில் இருக்கும் மைக்கல் ஹஸ்ஸி தோனியின் பயிற்சியையும், ஆட்டத்திறனையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அந்த வகையில் தோனி தற்போதும் பிட்டாக இருப்பதாக அவர் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement