டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் : ஒரே ஒரு ஸ்பின்னர் போதும். அதுவும் இவரே ஆடட்டும் – மைக்கல் ஹோல்டிங் கருத்து

Holding
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் வருகிற 18-ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மோத உள்ளது. இங்கிலாந்து நாட்டின் சவுதாம்ப்டன் நகரில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற இருக்கிறது.

INDvsNZ

- Advertisement -

இந்த போட்டி துவங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த போட்டி குறித்த பல்வேறு கருத்துக்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் ஹோல்டிங் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நிச்சயம் இங்கிலாந்து சூழ்நிலைகள் போட்டியில் ஒரு பெரிய பங்கினை வகிக்கும்.

ஏனெனில் இங்கிலாந்தில் உள்ள சூழ்நிலை எந்த அணிக்கு சாதகமாக அமைகிறதோ அந்த அணி வெற்றிக்கு அதிக சாதகத்தை எடுத்துக் கொள்ளும். ஏற்கனவே பலரும் நியூசிலாந்து அணிக்கு இங்கிலாந்து சூழ்நிலை சாதகமாக இருக்கும் என்று கூறிவருகின்றனர். இருப்பினும் இந்திய அணியின் பௌலிங் அட்டாக் இதுபோன்ற கண்டிஷனில் சிறப்பாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

Ashwin-1

சூழ்நிலைக்கு ஏற்றார்போல் இந்திய அணி இரண்டு ஸ்பின்னர்கள் அல்லது ஒரேயொரு ஸ்பின்னர்ருடன் விளையாடலாமா ? என்ற முடிவை எடுத்துக்கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை இறுதிப்போட்டிக்கு ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளர் இந்திய அணிக்கு போதும் என்று நான் நினைக்கிறேன். அந்த வகையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் எனது முதல் தேர்வு அவரால் சிறப்பாக பந்து வீச முடியும் அதேவேளையில் பேட்டிங்கிலும் கைகொடுக்க முடியும்.

ashwin

எனவே இந்த மைதானத்தில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் விளையாடினால் போதும். இந்த மைதானம் அதிகளவு ஸ்பின்னர்களுக்கு கைகொடுக்காது என்பதால் அனுபவம் வாய்ந்த ஒரு ஸ்பின்னர் விளையாடினாலே இந்த போட்டியில் போதுமான ஒன்று என்று மைக்கேல் ஹோல்டிங் கூறினார். இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி தற்போது குவாரண்டின் நாட்களை முடித்து பயிற்சியை துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement