கிரிக்கெட் உலகை பொறுத்தவரை ஒரு நாள் போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகளுக்கே எப்போதும் ஒரு தனி சிறப்பு இருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் கூட ஒரு நாள் மற்றும் டி20 அங்கீகாரத்தை எளிதில் பெற்று விடுகிறார்கள். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றால் அவர்களின் தனி திறமைகளை பொறுத்தே அவர்களின் வாய்ப்புகளும் அமைகின்றது.
இந்நிலையில் அடுத்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கவுண்டி போட்டிகளில் பங்கேற்க விராட் கோலி இங்கிலாந்து செல்கிறார். இன்னிலையில் தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவில் விளையாட வருகிறது ஆப்கானிஸ்தான் அணி. ஆனால், இந்த போட்டியில் விராட் கோலி பங்குபெறாதது ஆச்சரியமளிக்கிறது என்று பிரபல ஆஸ்திரேலியா வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தெரிவித்துள்ள மைக்கேல் கிளார்க் “கோலியின் முடிவு தனக்கு மிகுந்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாள் போட்டிகளை விட டெஸ்ட் தொடர் தான் மிக முக்கியமானது. மேலும்,கவுண்டி கிரிக்கெட்டில் ஆடுவதை விட நாட்டுக்காக ஆடுவது தான் முன்னுரிமையாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக தனது டெஸ்ட் போட்டியை ஆட இந்தியா வரவிருக்கிறது. அந்த போட்டியில் பங்குபெறாமல் கவுண்டி கிரிக்கெட்டில் பங்குபெற்றிருப்பது விராட் கோலியின் தாகத்தை உணர்த்துகிறது ” என்று கூறியுள்ளார்.
இதனால் விராட் வரும் ஜூன் மாதம் பெங்களூரில் நடக்கவுள்ள ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் பங்கு பெற மாட்டார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடிவரும் ரஹானே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து மற்றும் ஐயர்லாந்து தொடர்களில் அவர் பங்கேற்கப்போவதில்லை.