அவர் ஒரு குட்டி சேவாக், அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுங்கள் – மைக்கல் கிளார்க்

Clarke
- Advertisement -

கடந்த 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பையின் சாம்பியன் பட்டத்தை இளம் வீரர் பிரிதிவி ஷா தலைமையிலான இந்தியா வென்று சாதனை படைத்தது. இதன் காரணமாக தேர்வுக் குழு உட்பட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த இவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு தேடி வந்தது.

shaw 1

- Advertisement -

உலககோப்பையை வென்ற அதே 2018ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாக களமிறங்கிய அவர் அந்த முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தார். அதன்பின் கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் கடந்த 2021ல் இந்திய டி20 அணியில் விளையாடினார்.

தடுமாறும் பிரிதிவி ஷா :
இருப்பினும் கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள தவறிய அவர் பெரிய அளவில் ரன்களை குவிக்க தவறியதால் இந்திய அணியில் தனது இடத்தை இழந்தார். இதுவரை இந்தியாவுக்காக வெறும் 11 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் இந்திய அணியில் ஒரு நிரந்தரமான இடமில்லாமல் தடுமாறி வருகிறார். இருப்பினும் ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து விளையாடி வரும் அவர் முடிந்த அளவுக்கு ரன்களை குவித்து மீண்டும் இந்திய அணியில் விளையாடுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

Prithivi Shaw Sehwag

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் கடந்த சீசனில் 15 போட்டிகளில் 479 ரன்களை விளாசினார். அதன் காரணமாக ஐபிஎல் 2022 தொடரில் ரூபாய் 7.5 கோடிகளுக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் அவரை தக்கவைத்துள்ளது.

- Advertisement -

குட்டி சேவாக்:
இந்நிலைலையில் இந்தியாவின் முன்னாள் நட்சத்திர அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் போல விளையாடும் தன்மையைக்கொண்ட பிரிதிவி ஷாவுக்கு இந்திய அணி நிர்வாகம் ஆதரவளிக்க வேண்டுமென ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “அவர் விரேந்திர சேவாக் போல ஒரு மிகச்சிறந்த வீரர். சேவாக் ஒரு ஜீனியஸ் அவர் எப்போதுமே போட்டியை முன்னெடுத்துச் செல்வார். அது போன்ற வீரர்களை தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஆக்ரோஷமான அதிரடியான ஓபனிங் பேட்டர் என்பதால்தான் வீரேந்திர சேவாக் எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உள்ளார். எனவே பிரிதிவி ஷா போன்ற இளம் வீரர் மீது இந்திய அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்து ஆதரவு அளிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

- Advertisement -

Prithvi-Shaw

முன்னாள் இந்திய அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் போல ஓப்பனிங் இடத்தில் களமிறங்கி பவர் பிளே ஓவர்களில் பந்துவீச்சாளர்களை பட்டையை கிளப்பும் வீரராக பிரிதிவி ஷா வலம் வருகிறார். அவரின் பேட்டிங் ஸ்டைலை பார்த்த பல இந்திய ரசிகர்கள் அவரை “குட்டி சேவாக், அடுத்த சேவாக்” என அவர் சிறப்பாக விளையாடும் நேரங்களில் சமூக வலைதளங்களில் பாராட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

வாய்ப்பு கொடுங்கள்:
“பிரிதிவி ஷாவிடம் இருந்து அதிகப்படியாக எதிர்பார்ப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அவருக்கு இன்னும் நிறைய நேரம் தேவைப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் அவருக்கு அது முதல் வாய்ப்பாகும். அவர் தன்னை மாற்றிக் கொள்ள தேவையான வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் அவர் அந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டார்.

- Advertisement -

shaw

அதுதான் அவர் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொள்ளும் முதல் சுற்றுப் பயணம் என்பதால் விரைவில் அவர் நல்லபடியாக விளையாடுவார் என நம்புகிறேன்” என 2015 ஐசிசி உலக கோப்பையை வென்ற மைக்கேல் கிளார்க் இது பற்றி மேலும் தெரிவித்துள்ளார். கடைசியாக கடந்த 2020 இறுதியில் நிகழ்ந்த இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம் பிடித்திருந்த பிரித்வி ஷா 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடினார்.

இதையும் படிங்க : நான் என்ன அவரை போல பணத்துக்காக நாட்டை விற்றவரா? பாக் வீரர்களிடையே வெடித்த சண்டை

அடிலெய்ட் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான அவர் 2வது இன்னிங்சில் வெறும் 2 ரன்களில் அவுட் ஆனதால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதை தான் தற்போது குறிப்பிட்டுள்ள மைக்கல் கிளார்க் வருங்காலங்களில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என இந்திய அணி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளார். பிரிதிவி ஷாவின் திறமையைப் பார்த்த இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவரை “சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் கலந்த கலவை” என ஏற்கனவே பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement