நான் என்ன அவரை போல பணத்துக்காக நாட்டை விற்றவரா? பாக் வீரர்களிடையே வெடித்த சண்டை

Butt
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடர் போல பாகிஸ்தானில் கடந்த 2016 முதல் பாகிஸ்தான் பிரீமியர் லீக் எனப்படும் பிஎஸ்எல் டி20 தொடர் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடும் இந்த தொடரின் 7வது சீசன் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி முதல் பாகிஸ்தானின் கராச்சியில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது.

psl 3

- Advertisement -

அதில் கியூட்டா கிளாடியேட்டர் அணிக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் சர்ப்ராஸ் அகமது கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த சீசனில் அந்த அணி இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 தோல்விகளயும் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது.

மோசமான பார்ம் :
அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சர்ப்ராஸ் அகமது இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பெரிய அளவில் ரன்களை குவிக்ககாதது அந்த அணி 2 தோல்விகளை சந்திக்க ஒரு காரணமாக அமைந்தது. இதுவரை அவர் களமிறங்கிய 2 போட்டிகளில் முறையே 16* மற்றும் 21 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு வாக்கில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் அவர் கேப்டனாக இருந்தார்.

psl 1

ஆனாலும் ஒரு பேட்டராக பெரிய அளவில் ரன்கள் குவிக்க தவறியதால் முதலில் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அவர் அதன்பின் விளையாடும் 11 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். இதனால் பாகிஸ்தான் அணியில் அவரின் வாய்ப்புகள் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் தற்போது பிஎஸ்எல் தொடரிலும் அவர் பெரிய அளவில் ரன்களைக் குவிக்க முடியாமல் சோபிக்க தவறி வருகிறார்.

- Advertisement -

சல்மான் பட் விமர்சனம்:
இப்படிப்பட்ட நிலையில் பிஎஸ்எல் தொடரில் பெரிய அளவில் ஜொலிக்க தவறி வரும் சர்ப்ராஸ் அகமது பற்றி முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் விமர்சனம் செய்திருந்தார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் கூறியது பின்வருமாறு. “அவர் (சர்பிராஸ்) தமக்கு சாதகமாக கூட எதுவும் செய்வதில்லை. அவர் தமக்குத் தாமே கடினமான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொள்கிறார். அவரின் மோசமான செயல்பாட்டிற்கு அவரிடமிருந்து எந்த பதிலும் இருக்காது என நம்புகிறேன். முதலில் அவர் தனக்குத்தானே கவனத்தைச் செலுத்த வேண்டும். அவர் தனது சொந்த செயல்பாட்டை யோசித்து பார்க்க வேண்டும். தற்போதைய பாகிஸ்தான் அணியில் அவர் 2வது தர விக்கெட் கீப்பராக இருப்பதுடன் கடந்த ஒன்றரை வருடங்களாக பயணம் செய்துவிட்டு மட்டும் வருகிறார். எனவே அவர் மற்ற வீரர்களின் விஷயத்தில் தலையிடுவதை விட தனது சொந்த செயல்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்” என கூறி இருந்தார்.

Butt

இந்த கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் உலா வர அது சர்பிராஸ் அஹமத் கவனத்திற்கும் சென்றது. தம்மை ஒரு 2வது தர விக்கெட் கீப்பர் என விமர்சனம் செய்துள்ள சல்மான் பட்டை பார்த்து கொதித்தெழுந்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்துள்ளார்.

நாட்டை விற்றவன் அல்ல :
இது பற்றி தனது டுவிட்டரில் அவர் கூறியது பின்வருமாறு. “பாகிஸ்தானுக்காக விளையாடிய போது சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடுத்தவர்களின் செயல்பாடுகளைப் பற்றி முடிவு எடுப்பதில் கடைசி ஆளாக இருக்கவேண்டும்” என நான் ஒன்றும் சல்மான் பட் போல சூதாட்டத்தில் ஈடுபட்டு நாட்டை விற்றவன் அல்ல என மறைமுகமாக சாடியுள்ளார்.

Butt

அவர் கூறுவதுபோல கடந்த 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சல்மான் பட், முகமத் ஆமீர், முஹம்மது ஆசிப் ஆகிய 3 வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது உலகிற்கு அம்பலமானது. இதனால் அப்போதைய பாகிஸ்தான் அணியிலிருந்து உடனடியாக தடை நீக்கப்பட்ட அவர்கள் கைதாகி சிறைக்குச் சென்றதுடன் பாகிஸ்தானுக்காக விளையாட தடையும் பெற்றார்கள். மறுபுறம் பாகிஸ்தான் அணிக்காக கேப்டனாக இருந்த சர்பராஸ் அகமத் கடந்த 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்று கொடுத்து வரலாற்றில் தனது பெயரை பொறித்த பெருமையைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement