IND vs AUS : நீங்க சொல்றது புரியுது ஆனா அதையும் பாப்போம், சௌரவ் கங்குலிக்கு மைக்கேல் கிளார்க் சவால் பதிலடி

Micheal Clarke Sourav Ganguly
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக திகழும் ஆஸ்திரேலியா இம்முறை இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்து 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்ததற்கு பதிலடி கொடுத்து 2004க்குப்பின் தொடரை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்காக பிட்ச் பற்றி தேவையின்றி விமர்சித்த ஆஸ்திரேலியா மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது.

Pat-Cummins

- Advertisement -

குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்ஷேன் உள்ளிட்ட ஒரு சில தரமான வீரர்களை தவிர்த்து பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சுழலாமல் நேராக வரும் பந்துகளை கூட சரியாக எதிர்கொள்ள தேவையான டெக்னிக் தெரியாமல் ஸ்வீப் ஷாட் அடித்து களீன் போல்ட்டானர்கள். அதனால் பிட்ச் மீது எந்த தவறுமில்லை என்பதை புரிந்து கொண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் தங்களது அணி வீரர்களை விமர்சித்து வருகிறார்கள். தற்போதைய நிலைமையில் அடுத்த 2 போட்டிகளில் வென்று குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களது நம்பர் ஒன் இடத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது.

கங்குலிக்கு பதிலடி:
ஆனால் தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறும் ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் வெளியேறியுள்ளது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பொதுவாகவே தோற்றாலும் போராடி தோற்பதற்கு பெயர் போன ஆஸ்திரேலியா இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் 3வது நாளில் 2 மணி நேரத்தில் கொஞ்சமும் போராடாமல் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. அதனால் ஸ்டீவ் வாக், பாண்டிங், கில்கிறிஸ்ட் போன்ற தரமான வீரர்கள் தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் இல்லாததால் நிச்சயமாக இந்தியா 4 – 0 (4) என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் வெற்றியை பதிவு செய்யும் என்று சமீபத்தில் முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.

Sourav Ganguly Aus

இந்நிலையில் கங்குலி எதை வைத்து அவ்வாறு கணித்தார் என்பதை புரிந்து கொள்ள முடிவதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் க்ளார்க் கூறியுள்ளார். இருப்பினும் தங்களை அணி நிச்சயமாக கொதித்தெழுந்து இத்தொடரை சமன் செய்யும் என்று பதிலடி கொடுத்துள்ள அவர் அதற்கான சில ஆலோசனைகளை கொடுத்து இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்ருமாறு. “ஆஸ்திரேலியா நிச்சயமாக இதிலிருந்து கொதித்து எழும்பும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒருவேளை அவர்கள் இங்கே பெரிய வெற்றியை பதிவு செய்ய தவறினால் அது ஒவ்வொரு ஆஸ்திரேலிய ரசிகரையும் கடுப்பாக வைக்கும். அதே சமயம் சௌரவ் கங்குலி ஏன் 4 – 0 என்று கணித்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது”

- Advertisement -

“பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் என்ன நினைக்கிறார் என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இத்தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா முன்கூட்டியே இந்தியாவுக்கு சென்றிருக்க வேண்டும். ஏனெனில் சரியாக தயாராகாதது இவை அனைத்திற்கும் காரணமாகும். ஒருவேளை இந்தியாவுக்கு முன்கூட்டியே செல்லாமல் இருந்திருந்தால் கூட துபாய்க்கு சென்று பயிற்சிகளை எடுத்திருக்க வேண்டும். அந்த வகையில் இத்தொடருக்கு முன்பாக பயிற்சி போட்டியில் விளையாடாதது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தவறாகும்”

michael-clarke

“ஏனெனில் ஆஸ்திரேலியாவில் உள்ள கால சூழ்நிலைகளை வைத்து இந்தியாவில் நீங்கள் விளையாட முடியாது. பொதுவாக இங்கிலாந்தில் வேகம், ஸ்விங் ஆஸ்திரேலியாவில் வேகம், பவுன்ஸ் இருப்பது போல இந்தியாவில் சுழல் இருக்கும். எனவே அதை சொந்த மண்ணில் தயாராகி சமாளிக்க முடியும் என்பது அசாத்தியமானது. இந்தியாவில் தற்போது இத்தொடரில் வர்ணனையாளர்களாக செயல்படும் ஹெய்டன், மார்க் வாக் ஆகியோருக்கு வேண்டுமானால் பணம் கொடுத்து ஒவ்வொரு நாளும் ஆஸ்திரேலிய அணியின் வலைப்பயிற்சியை கவனிக்குமாறு அணி நிர்வாகம் கேட்டுக்கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க:IND vs AUS : அது நிச்சயமா நடக்கும் ஏன்னா நீங்க 2001 டீம் மாதிரி ஒர்த் இல்ல – ஆஸ்திரேலியாவை எச்சரித்த கங்குலி

“குறிப்பாக ஒவ்வொரு முறையும் ஸ்வீப் ஷாட் அடிக்கக்கூடாது என்று ஹெய்டன் தெரிவித்திருந்தார். அது நீங்கள் செட்டிலாகி 80 ரன்களில் இருக்கும் போது அடிக்க வேண்டிய ஷாட்டாகும். 8 ரன்களில் அல்ல. எனவே அந்த முன்னாள் வீரர்களின் அனுபவத்தை ஏன் ஆஸ்திரேலியா பயன்படுத்தி கொள்ள கூடாது” என்று கூறினார்.

Advertisement