- Advertisement -
ஐ.பி.எல்

ஏத்துக்க முடியாது.. உங்க தவறே டெல்லியின் தோல்விக்கு காரணம்.. ரிஷப் பண்ட்டை விமர்சித்த மைக்கேல் கிளார்க்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தங்களுடைய 6வது தோல்வியை பதிவு செய்தது. குறிப்பாக ஏப்ரல் 29ஆம் தேதி ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டெல்லி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி சுமாராக விளையாடி 153/9 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35* ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 154 ரன்கள் துரத்திய கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக பில் சால்ட் 68, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 33* ரன்கள் எடுத்து 16.3 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். அதனால் அக்சர் பட்டேல் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

தவறான முடிவு:
குறிப்பாக முதல் 5 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்ற அந்த அணி அடுத்த 5 போட்டிகளில் 4 வெற்றிகள் பெற்றது. அதனால் ஃபார்முக்கு வந்து விட்டதாக கருதப்பட்ட டெல்லி அணி மீண்டும் இப்போட்டியில் தோல்வியை பெற்று மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பேட்டிங் செய்த முடிவு தவறாக அமைந்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “போட்டியின் முடிவில் கேப்டன் சொன்னதை நான் ஏற்றுக் கொள்வேன் என்று உறுதியாக சொல்ல முடியாது. நீங்கள் வெற்றி பெற்றால் அனைத்தையும் சரியாக செய்திருப்பீர்கள். தோல்வியை சந்தித்தால் நீங்கள் சரியாக செயல்பட்டிருக்க மாட்டீர்கள். அந்த வகையில் இந்த பிட்ச்சில் ரிஷப் பண்ட் முதலில் பேட்டிங் செய்து தவறு செய்தார் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“அவர்கள் வெற்றிக்கு 10 ரன்கள் மட்டும் குறைவாக எடுத்ததாக எனக்குத் தோன்றவில்லை. அவர்கள் 50 ரன்கள் குறைவாக எடுத்திருந்தனர். ஏனெனில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்த கொல்கத்தா சேசிங் செய்து முடித்த போது 3.3 ஓவர்கள் மீதம் இருந்தது. அந்த ஓவர்களில் கொல்கத்தா அணியால் குறைந்தது 40 – 50 ரன்கள் அடித்திருக்க முடியும். எனவே இப்போட்டியில் முதலில் பேட்டிங் சேர்ந்த டெல்லி குறைந்தது 200 ரன்கள் அடித்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: அதை விமர்சித்து அழுது பொலம்பாம முடிஞ்சா திறமைய காட்டுங்க.. ரோஹித், சிராஜ் உள்ளிட்டோருக்கு வருண் பதில்

“இந்த வெற்றியால் கொல்கத்தா மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். ஆனால் அடுத்தடுத்த வெற்றிகளால் ஃபார்முக்கு திரும்பிய டெல்லி இந்த தோல்வியால் ஏமாற்றத்தை சந்தித்திருப்பார்கள். கடந்த 2 போட்டிகளில் சந்தித்த வெற்றியால் நாம் நன்றாக விளையாடுவதாக அவர்கள் தன்னம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் இன்றைய போட்டியில் சந்தித்த தோல்வி ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். டி20 கிரிக்கெட்டில் எதுவும் உங்களுடைய திட்டத்திற்கு தகுந்தார் போல் செல்லாது” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கூறினார்.

- Advertisement -