முரட்டு தனமான மிரட்டல் ஹிட்டரை மாற்றுவீரராக ஒப்பந்தம் செய்துள்ள மும்பை இந்தியன்ஸ் – விவரம் இதோ

MI
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மே 8-ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது தடைப்பட்டது. அதன் பின்னர் ஒரு வாரம் காலம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் மே 17-ஆம் தேதி நாளை துவங்க உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்த அதிரடி வீரர் :

அதன்படி நாளை நடைபெற இருக்கும் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோத இருக்கின்றன. இந்த தொடரின் 50-க்கும் மேற்பட்ட லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள வேளையில் எஞ்சியுள்ள 17 ஆட்டங்கள் நாளை துவங்கி ஜூன் 3-ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதற்கான அட்டவணையும் அறிவிக்கப்பட்டு விட்டது.

- Advertisement -

இந்தியாவில் தற்போது உள்ள சூழல் காரணமாகவும் சர்வதேச போட்டியில் அட்டவணை காரணமாகவும் எஞ்சியுள்ள இந்த ஐபிஎல் தொடரில் பல்வேறு வெளிநாட்டு வீரர்களால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகங்களும் தாங்கள் விரும்பும் மாற்று வீரர்களை எஞ்சியுள்ள தொடருக்கு தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அந்த தேர்வு இந்த ஆண்டு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களாக இடம் பிடித்து விளையாடி வந்த ரியான் ரிக்கல்டன் மற்றும் வில் ஜேக்ஸ் ஆகியோர் தேசிய கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக நாடு திரும்பியுள்ள வேளையில் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் ரிச்சர்டு கிலீசன் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது.

இதையும் படிங்க : அன்று டிராவிட், சேவாக் இன்று ரோஹித், கோலி.. பிசிசிஐக்கு இதான் வேலையா? எப்போ திருந்துவீங்க.. கும்ப்ளே சாடல்

கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடியிருந்த கிளீசன் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மாற்றுவீரராக ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோன்று ஐபிஎல் தொடரில் பல ஆண்டு காலம் அனுபவம் வாய்ந்த அதிரடி ஆட்டக்காரரான ஜானி பேர்ஸ்டோவையும் ஒப்பந்தம் செய்ததால் தற்போது அந்த அணிக்கு கூடுதல் பலம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement