215 ரன்ஸ்.. ரெய்னாவை முந்தி சூரியகுமார் அதிரடி சாதனை.. ஆரஞ்சு தொப்பியுடன் உத்தப்பா தனித்துவ சாதனை சமன்

Suryakumar Yadav
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27ஆம் தேதி மும்பையில் 45வது போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி மும்பைக்கு எதிராக முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு கடந்தப் போட்டிகளில் அசத்திய ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட முயற்சித்து 12 (5) ரன்னில் மயங் யாதவ் வேகத்தில் அவுட்டானார்.

இருப்பினும் மறுபுறம் அதிரடி காட்டிய ரியான் ரிக்கல்ட்டன் 25 பந்தில் அரை சதமடித்து அசத்தினார். தொடர்ந்து அசத்திய அவர் 58 (32) ரன்கள் எடுத்த போது திக்வேஷ் சுழலில் சிக்கினார். அவருடன் சேர்ந்து மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த வில் ஜேக்ஸ் 29 (21) ரன்னில் பிரின்ஸ் யாதவ் வேகத்தில் போல்டானார்.

- Advertisement -

சூரியகுமார் மிரட்டல்:

அடுத்ததாக வந்த நம்பிக்கை நாயகன் சூரியகுமார் நேரத்தை வீணடிக்காமல் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். அவருடன் எதிர்புறம் அதிரடி காட்ட முயற்சித்த திலக் வருமா 6 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதே போல கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 5 (7) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

அவர்களுக்கும் சேர்த்து மறுபுறம் வெளுத்து வாங்கிய சூரியகுமார் அரை சதத்தை அடித்து 54 (28) ரன்கள் விளாசி மும்பையை வலுப்படுத்தி பெவிலியன் திரும்பினார். கடைசி நேரத்தில் நமன் திர் அதிரடியாக விளையாடி 25* (11), கோர்பின் போஸ் அதிரடியாக 20 (10) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் மும்பை 215/7 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

அபார சாதனைகள்:

லக்னோவுக்கு அதிகபட்சமாக மயங் யாதவ் 2 விக்கெட்டுகள் எடுத்து காயத்தில் இருந்து நல்ல கம்பேர் கொடுத்தார். அவருடன் ஆவேஷ் கானும் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக இந்தப் போட்டியில் சூரியகுமார் யாதவ் தம்முடைய ஸ்டைலில் 360 டிகிரியில் விளையாடி 27 பந்துகளில் 50 ரன்கள் கடந்து அசத்தினார். மேலும் இந்தப் போட்டியின் போது அவர் 4000 ரன்கள் கடந்துள்ளார்.

இதையும் படிங்க: பாகிஸ்தானை வெச்சு இந்தியா நல்லா நடிக்கிறாங்க.. 8 லட்சம் இருந்தும் வேஸ்ட்டா? ஆதாரம் காட்டுங்க.. அப்ரிடி காட்டம்

அதை 2714 பந்துகளில் எடுத்துள்ள சூரியகுமார் யாதவ் ஐபிஎல் வரலாற்றில் பந்துகள் அடிப்படையில் வேகமாக 4000 ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற சுரேஷ் ரெய்னா சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் சிஎஸ்கே ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா 2886 பந்துகளில் 4000 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. மேலும் ஒரு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அதிக முறை 25+ ரன்கள் அடித்த வீரர் என்ற ராபின் உத்தப்பா வரலாற்று (இருவரும் தலா 10 முறை) சாதனையையும் சூரியகுமார் சமன் செய்துள்ளார். அத்துடன் மொத்தமாக 427 ரன்கள் அடித்துள்ள அவர் சாய் சுதர்சனை (417) முந்தி ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ளார்.

Advertisement