97/2 டூ 155/8.. குஜராத்திடம் தடுமாறிய மும்பைக்காக.. 3 முறை 500 விளாசிய சூரியகுமார்.. சச்சினை முந்தி சாதனை

MI vs GT
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 6ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பையில் 56வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு ரியான் ரிக்கல்ட்டன் 2 ரன்னில் சிராஜ் வேகத்தில் நடையைக் கட்டினார்.

மறுபுறம் தடுமாற்றமாக விளையாடிய ரோஹித் சர்மா 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்ததால் 26-2 என மும்பை ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த சூரியகுமார் – வில் ஜேக்ஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். மூன்றாவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் சூரியகுமார் 35 (24) ரன்னில் சாய் கிசோர் சுழலில் விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

சூரியகுமார் சாதனை:

இதையும் சேர்த்து இந்த வருட ஐபிஎல் தொடரில் சூரியகுமார் யாதவ் 12 போட்டிகளில் 510* ரன்கள் அடித்து விராட் கோலியை முந்தி ஆரஞ்சு தொப்பியை தற்காலிகமாக தன்வசம் ஆகியுள்ளார். இது போக ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சூரியகுமார் 2018, 2023 ஆகிய வருடங்களில் தலா 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளார்.

இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிக (3) முறை மும்பை அணிக்காக 500+ ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சூரியகுமார் படைத்துள்ளார். இதற்கு முன் மும்பைக்காக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 2010, 2011 மற்றும் குவிண்டன் டீ காக் 2019, 2020 வருடங்களில் 2 முறை தலா 500+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் அதிரடி காட்டிய வில் ஜேக்ஸ் அரை சதத்தை அடித்து 53 (35) ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

மும்பை தடுமாற்றம்:

ஆனால் அடுத்து வந்த திலக் வர்மா 7, கேப்டன் ஹர்திக் பாண்டியா 1, நமன் திர் 7 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணிக்கு கடைசி நேரத்தில் கோர்பின் போஸ்க் அதிரடியாக 27 (22) ரன்கள் எடுத்தார். இறுதியில் தீபக் சஹார் 8* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் மும்பை 155-8 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க: 140 கோடி இந்தியர்களுக்காக நான் செய்ற விஷயம்.. 25 வருட கமெண்டரி கவாஸ்கருக்கு தெரியாது.. கம்பீர் பதிலடி

குஜராத் அணிக்கு அதிகபட்சமாக சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதைத் தொடர்ந்து 156 ரன்களை எடுத்து வெற்றி பெறும் முனைப்புடன் குஜராத் விளையாடுகிறது. மறுபுறம் தொடர்ந்து 6 வெற்றிகளை பெற்றுள்ள மும்பை 7வது வெற்றியைப் பெற போராட உள்ளது.

Advertisement