140 கோடி இந்தியர்களுக்காக நான் செய்ற விஷயம்.. 25 வருட கமெண்டரி கவாஸ்கருக்கு தெரியாது.. கம்பீர் பதிலடி

Gautam Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் மோசமான தோல்விகளை சந்தித்த இந்தியா 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றிக்காக பிசிசிஐ 58 கோடி ரூபாய் பரிசாக வழங்கியது. அந்த பரிசுத் தொகையில் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு 2 கோடி ரூபாய்களை பிசிசிஐ பரிசாக வழங்கியது.

மறுபுறம் 2024 டி20 உலகக் கோப்பை என்ற இந்திய அணிக்கு 125 கோடி பிரம்மாண்ட பரிசுத் தொகையை பிசிசிஐ வழங்கியது. அதில் ராகுல் டிராவிட்டுக்கு மட்டும் 2.5 கோடிகளை பிசிசிஐ எக்ஸ்ட்ரா பரிசாக வழங்கியது. இருப்பினும் அதை ஏற்க மறுத்த டிராவிட் அந்தப் பரிசை சக பயிற்சியளர்களுக்கு பகிர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

- Advertisement -

கவாஸ்கர் கேள்வி:

அதே போல கௌதம் கம்பீர் பெருந்தன்மையைக் காட்டுவாரா என்று கவாஸ்கர் கேள்வி சமீபத்தில் எழுப்பியிருந்தார். இந்நிலையில் 25 வருடங்கள் வர்ணனையாளர் அறையில் உட்கார்ந்து கொண்டு அனைத்தையும் கேள்வி எழுப்பும் கவாஸ்கர் தமது பரிசுத்தொகையை பற்றி பேசத் தேவையில்லை என்று கௌதம் கம்பீர் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “140 கோடி இந்தியர்களின் தலைமைப் பயிற்சியாளராக நான் பொறுப்பேற்ற போது அணியின் செயல்பாடு குறித்து ஒவ்வொரு நாளும் நீங்கள் பாராட்டுவீர்கள் அல்லது விமர்சிப்பீர்கள் என்பதை நான் அறிவேன். அந்த விமர்சனங்கள் எப்போதும் கீழே செல்லாமல் மேலே சென்று கொண்டிருக்கும்”

- Advertisement -

கம்பீர் பதிலடி:

“எனது வேலையில் மேடு பள்ளங்கள் இருக்கும். நாட்டுக்காக வேலை செய்யக்கூடிய பெருமை மிகுந்த இந்த வேலையை ஏற்று 8 மாதங்கள் மட்டுமே முடிந்துள்ளது. அதில் வெற்றி முடிவுகள் வரவில்லையெனில் விமர்சனம் செய்யுங்கள் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளேன். விமர்சனம் செய்வது மக்கள் வேலை. ஆனால் சிலர் 25 வருடங்கள் வர்ணனையாளர் அறையில் உட்கார்ந்து கொண்டு அனைத்தையும் கேள்வி கேட்கிறார்கள்”

“அவர்கள் இந்திய கிரிக்கெட்டை தங்களுடைய சொத்தாக நினைக்கிறார்கள். உண்மையில் அது யாருடைய சொத்தும் அல்ல. 140 கோடி இந்தியர்களின் சொத்து. அதை அறியாத அவர்கள் என்னுடைய பயிற்சி, சாதனைகள், பரிசுத்தொகை பற்றி கேள்வி எழுப்பினர். சாம்பியன்ஸ் ட்ராபி வென்றதற்காக பெற்ற பரிசுத்தொகையை எங்கே வைத்துள்ளேன், முதலீடு செய்துள்ளேன் என்பதை இந்த நாட்டுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை”

இதையும் படிங்க: அவங்க இருக்கப்போ பாகிஸ்தானால் ஐபிஎல், இந்தியர்கள் தூக்கத்தையும் தொட முடியாது.. கவாஸ்கர் நம்பிக்கை

“ஆனால் விமர்சனம் செய்யும் நபர்கள் இங்கே சம்பாதித்து அதை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். எனது கடைசி மூச்சு வரை இந்தியனாக இருக்கப்போகும் நான் வெளிநாட்டவராக வரிகளை சேமிக்கப் போவதில்லை. கண்ணாடி வீடுகளில் இருப்பவர்கள் மற்ற வீடுகளில் மேல் கல்லை எறியக்கூடாது” எனக் கூறினார்.

Advertisement