155 ரன்ஸ்.. 43 வயதில் வெறும் 0.12 நொடியில் மின்னல் வேகத்தில் மிரட்டிய தல தோனி.. மும்பைக்கு எதிராக நூர் சாதனை

Noor Ahmed
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 23ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மூன்றாவது லீக் போட்டி நடைபெற்றது. அதில் தலா 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணிக்கு முதல் ஓவரிலேயே ரோகித் சர்மாவை டக் அவுட்டாக்கிய கலீல் அகமது மறுபுறம் தடுமாறிய ரியான் ரிக்கல்டனை 13 ரன்னில் கிளீன் போல்ட்டாக்கினார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் தமிழகத்தின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலில் 11 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதனால் 36-3 என ஆரம்பத்திலேயே மும்பை தடுமாறியது.

- Advertisement -

மின்னல் வேகத்தில் தல:

அப்போது திலக் வர்மா – கேப்டன் சூரியகுமார் யாதவ் நிதானமாக விளையாட முயற்சித்தனர். ஆனால் அந்த ஜோடியில் சூரியகுமார் 29 (26) ரன்களில் நூர் அஹ்மத் வீசிய தரமான சுழல் பந்தில் தோனியின் அற்புதமான ஸ்டம்பிங்கில் அவுட்டானார். குறிப்பாக 43 வயதாகும் தோனி மின்னல் வேகத்தில் வெறும் 0.12 வினாடிப் பொழுதில் சூரியகுமார் காலை மீண்டும் வெள்ளைக்கோட்டுக்குள் கொண்டு வருவதற்குள் ஸ்டம்பிங் செய்தார்.

அதனால் வயதானாலும் நமது மின்னல் வேக ஸ்டம்பிங் ஸ்டைல் மாறாது என்பதை தல தோனி மீண்டும் நிரூபித்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்து வந்த ராபின் மின்சை 3 ரன்னில் காலி செய்த அஹமத் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய திலக் வர்மாவையும் 31 ரன்னில் பெவிலியன் அனுப்பினார்.

- Advertisement -

நல்ல பவுலிங்:

அதோடு நிற்காத அவர் அதற்கு அடுத்ததாக வந்த நமன் திரையும் 17 ரன்னில் அவுட்டாக்கினார். அதற்கடுத்ததாக வந்த மிட்சேல் சான்ட்னர் 11 ரன்னில் அவுட்டானாலும் கடைசி நேரத்தில் முன்னாள் சிஎஸ்கே வீரர் தீபக் சஹார் 28* (15) அதிரடியாக ரன்கள் எடுத்தார். அதனால் 20 ஓவரில் மும்பை 155-9 ரன்கள் எடுத்த நிலையில் சென்னைக்கு அதிகபட்சமாக கலீல் அகமது 3, நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையும் படிங்க: முதல் போட்டிக்கான சி.எஸ்.கே அணியில் மதீஷா பதிரானா இடம்பெறாதது ஏன்? – விவரம் இதோ

குறிப்பாக நூர் அஹ்மத் 4 ஓவரில் 18 ரன்கள் மட்டும் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் வாயிலாக மும்பைக்கு எதிராக சிறந்த பௌலிங் பதிவு செய்த சிஎஸ்கே ஸ்பின்னர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதைத் தொடர்ந்து 156 ரன்கள் இலக்கை சென்னை அணி துரத்தி வருகிறது.

Advertisement