முதல் போட்டிக்கான சி.எஸ்.கே அணியில் மதீஷா பதிரானா இடம்பெறாதது ஏன்? – விவரம் இதோ

Pathirana
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 2025-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியானது சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில் சி.எஸ்.கே அணி சார்பாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானா இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

முதல் போட்டியில் மதீஷா பதிரானா இடம் பெறாதது ஏன்? :

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை அணியின் நட்சத்திர வீரராக விளங்கி வரும் மதீஷா பதிரானா பல்வேறு போட்டிகளில் சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்து வந்தார். அதுமட்டும் இன்றி பந்துவீச்சில் டெத் ஓவர்களின் போது அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் எதிரணிகளுக்கு ஒரு அச்சுறுத்தலாகவும் இருந்து வந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக சென்னை அணியின் எதிர்கால நட்சத்திர வீரராகவும் பதிரானா பார்க்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் இந்த 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே அவர் விளையாடாதது ஏன்? என்ற கேள்வி பலரது மத்தியிலும் எழுந்துள்ளது. அந்த வகையில் இதற்கான காரணம் என்பது என்ன? என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில் மதீஷா பதிரானா ஏற்கனவே சிறிய காயத்தை சந்தித்திருந்ததால் அவர் இன்னும் முழுமையாக பிட்டாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரை முன்கூட்டியே களம் இருக்கக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை காரணமாக அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இது குறித்து பேசியிருந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் :

- Advertisement -

முதல் போட்டிக்கு பதிரனா 100% உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே களமிறங்குவார் என்று தெரிவித்திருந்ததால் அவருக்கு சிறிய காயம் இருப்பது உறுதியாகி உள்ளது. அதோடு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான நாதன் எல்லிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் சமீபகாலமாகவே மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவரது திறனையும் சோதிக்க வேண்டி அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அஷ்வின் ரிட்டர்ன்.. பதிரானா இல்லை.. மும்பை அணிக்கெதிரான டாஸிற்கு பிறகு பேசிய – ருதுராஜ் கெய்க்வாட்

இருப்பினும் சில போட்டிகளில் நாதன் எல்லிஸை வைத்து சோதனை நடத்தினாலும் நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளிலேயே மீண்டும் அணிக்குள் வந்துவிடுவார் என்பது உறுதி.

Advertisement