அஷ்வின் ரிட்டர்ன்.. பதிரானா இல்லை.. மும்பை அணிக்கெதிரான டாஸிற்கு பிறகு பேசிய – ருதுராஜ் கெய்க்வாட்

Ruturaj
- Advertisement -

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணிக்கும், சூரியகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே சற்று முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

முதல் போட்டிக்கான சி.எஸ்.கே அணியின் பிளெயிங் லெவன் :

இந்நிலையில் இந்த முதல் போட்டிக்கான சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஏனெனில் கடந்த ஆண்டு மெகா ஏலம் முடிந்த பின்னர் சிஎஸ்கே அணி சில மாற்றங்களை செய்திருந்தால் இந்த ஆண்டு எப்படிப்பட்ட பிளேயிங் லெவன் இருக்கும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த முதல் போட்டிக்கான டாசின் போதே பிளேயிங் லெவனை ருதுராஜ் கெய்க்வாட் உறுதி செய்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் இந்த முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனில் : ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் துவக்க வீரர்களாக இடம் பிடித்திருந்தனர். மூன்றாவது இடத்தில் தீபக் ஹூடாவும், நான்காவது இடத்தில் ஷிவம் துபேவும், ஐந்தாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜாவும், ஆறாவது இடத்தில் சாம் கரனும் இடம் பிடித்துள்ளனர். ஏழாவது இடத்தில் அன்ட் கேப்டு வீரர் எம்.எஸ் தோனி இடம் பிடித்துள்ளார்.

எட்டாவது இடத்தில் அஸ்வினும், ஒன்பதாவது இடத்தில் நூர் அகமதும் இடம் பிடித்துள்ளனர். பத்தாவது மற்றும் 11-வது இடத்தில் வேகப்பந்து வீச்சாளர்களாக நாதன் எல்லிஸ் மற்றும் கலீல் அகமது ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த போட்டியின் போது நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானா இடம்பெறாதது ஏமாற்றம் அளித்திருந்தாலும் காயம் காரணமாக அவருக்கு ஓய்வு தேவைப்பட்டு இருக்கலாம் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அவர் இடம் பிடிக்காமல் போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதே போன்று டாசுக்கு பிறகு பேசிய ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் முதலில் பந்துவீசவே விரும்புகிறோம். ஏனெனில் நாங்கள் இந்தப் பிட்சில் முதல் முறையாக விளையாட இருக்கிறோம். எனவே சேசிங் செய்வது சரியான தேர்வாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த போட்டியில் பேட்டிங் செய்ய மைதானம் கைகொடுக்கும் என்று நினைக்கிறேன். நமது அணியில் இளம் விக்கெட் கீப்பர் தோனி இருக்கிறார். வெளிநாட்டு வீரர்களாக நூர், எல்லிஸ், ரச்சின் மற்றும் சாம்கரன் ஆகியோர் இருக்கின்றனர் என அவர் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நான் அடிச்ச இந்த மிரட்டல் சதம் அவங்களுக்காக தான்.. இனிமேலும் இது தொடரும் – இஷான் கிஷன் அதிரடி பேட்டி

மும்பை அணிக்கெதிரான சி.எஸ்.கே அணியின் பிளெயிங் லெவன் : 1) ருதுராஜ் கெய்க்வாட், 2) ரச்சின் ரவீந்திரா, 3) தீபக் ஹூடா, 4) ஷிவம் துபே, 5) ரவீந்திர ஜடேஜா, 6) சாம் கரன், 7) தோனி, 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) நூர் அகமது, 10) நாதன் எல்லிஸ், 11) கலீல் அகமது.

Advertisement