நான் அடிச்ச இந்த மிரட்டல் சதம் அவங்களுக்காக தான்.. இனிமேலும் இது தொடரும் – இஷான் கிஷன் அதிரடி பேட்டி

Ishan SRH
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியானது மார்ச் 23-ஆம் தேதியான இன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியன் கேப்டன் ரியான் பராக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அவங்க என்மேல வச்ச நம்பிக்கைக்காக தான் இந்த சதம் அடிச்சேன் : இஷான் கிஷன்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது தங்களது சொந்த மைதானத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்தது. கடந்த ஆண்டு ஒவ்வொரு போட்டியிலும் 200 ரன்கள் அடித்து அசாத்தியமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த அவர்கள் இந்த தொடரின் முதல் போட்டியிலும் வான வேடிக்கை நிகழ்த்தினர்.

- Advertisement -

இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 286 ரன்கள் குவித்து அசத்தியிருந்தனர். குறிப்பாக சன்ரைசர்ஸ் அணி சார்பாக பேட்டிங் செய்ய களத்தில் வந்த அனைவருமே 200 ஸ்ட்ரைக் கேட்டுக்கு மேல் அடித்து நொறுக்கினர்.

இந்த போட்டியில் வழக்கம் போல டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் அதிரடியாக துவக்கத்தை கொடுத்திருந்த வேளையில் மூன்றாவது வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் சன் ரைசர்ஸ் அணிக்காக அறிமுகமான போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணிக்காக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் 47 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என வெளுத்து வாங்கி 106 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் தனது முதல் சதம் அடித்தது குறித்து பேசியிருந்த அவர் கூறுகையில் : உண்மையிலேயே கடந்த ஆண்டு இது போன்ற ஒரு சதத்தை அடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது இப்போது வந்துள்ளதில் மகிழ்ச்சி. சன்ரைசர்ஸ் அணியானது என் மீது வைத்த நம்பிக்கைக்காகவே அவர்களுக்காக இந்த சதத்தை அடிக்க ஆசைப்பட்டேன்.

இதையும் படிங்க : மும்பை அணி கழட்டிவிட்ட பாக்கெட் டைனமோ.. வெடித்து சிதறிய இஷான் கிஷன் மிரட்டல் சதம் – விவரம் இதோ

அதோடு எனது கேப்டன் எனக்கு சுதந்திரத்தையும், தன்னம்பிக்கையும் வழங்கினார். அணியின் நிர்வாகமும் எனக்கு முழு சுதந்திரம் அளித்தது. அவர்களின் இந்த ஆதரவினாலே என்னால் சிறப்பான சதத்தை விளாச முடிந்தது என இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement