ஐபிஎல் 2022 : மும்பை இந்தியன்ஸ் அணியின் முழு அட்டவணை, வீரர்கள் விவரம், உத்தேச ப்ளேயிங் லெவன் இதோ

MI
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி வரும் மே 27ம் தேதி வரை மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இம்முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதை அடுத்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது.

Ganguly-ipl
IPL MI

இதில் மார்ச் 26 ஆம் தேதி அன்று துவங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. அத்துடன் இந்த முறை அனைத்து ஐபிஎல் போட்டிகளும் வழக்கமாக நடைபெறும் 7 – 8 நகரங்களுக்கு பதிலாக மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ்:
இம்முறை 10 அணிகள் பங்கு பெறுவதால் வழக்கமாக நடைபெறும் 60 போட்டிகள் ஃபார்மட்டுக்கு பதிலாக 10 அணிகளும் தலா 5 அணிகள் கொண்ட குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவுகள் இதற்கு முன் ஒரு அணி எத்தனை முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது மற்றும் எத்தனை முறை இறுதிப்போட்டியில் விளையாடி உள்ளது என்பதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது.

ishan
ishan MI

அந்த வகையில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி குரூப் ஏ பிரிவின் முதல் அணியாக இடம் பிடித்துள்ளது. மேலும் இம்முறை அனைத்து லீக் போட்டிகளும் மும்பை, புனே போன்ற மைதானங்களில் விளையாடப்பட உள்ளதது. எனவே சென்னை, டெல்லி உள்ளிட்ட மற்ற அணிகளை காட்டிலும் சொந்த மைதானத்தில் விளையாடும் அற்புதமான வாய்ப்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமே கிடைத்துள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய சாதகமாக கருதப்படுகிறது.

- Advertisement -

முழு அட்டவணை வெளியீடு:
இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடருக்கான முழு அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதில் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதி வரை நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி உள்ளிட்ட பிளே ஆப் சுற்று போட்டிகளுக்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

mivsdc

அந்த அட்டவணையின் படி 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியின் முழு அட்டவணை இதோ:
மார்ச் 27, இரவு 7.30 மணி, மும்பை இந்தியன்ஸ் V டெல்லி கேப்பிடல்ஸ், ப்ராபோர்ன் மைதானம் மும்பை.

- Advertisement -

ஏப்ரல் 2, மதியம் 3.30 மணி, மும்பை இந்தியன்ஸ் V ராஜஸ்தான் ராயல்ஸ், டிஒய் பாட்டில் மைதானம், மும்பை.

ஏப்ரல் 6, இரவு 7.30 மணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் V மும்பை இந்தியன்ஸ், எம்சிஏ மைதானம், புனே.

- Advertisement -

ஏப்ரல் 9, இரவு 7.30 மணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் V மும்பை இந்தியன்ஸ், எம்சிஏ மைதானம், புனே.

ஏப்ரல் 13, இரவு 7.30 மணி, மும்பை இந்தியன்ஸ் V பஞ்சாப் கிங்ஸ், எம்சிஏ மைதானம், புனே.

ஏப்ரல் 16, இரவு 7.30 மணி, மும்பை இந்தியன்ஸ் V லக்னோ சூப்பர் ஜெய்ன்ஸ், ப்ராபோர்ன் மைதானம் மும்பை.

ஏப்ரல் 21, இரவு 7.30 மணி, மும்பை இந்தியன்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், டிஒய் பாட்டில் மைதானம், மும்பை.

ஏப்ரல் 24, இரவு 7.30 மணி லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் V மும்பை இந்தியன்ஸ், வான்கடே மைதானம், மும்பை.

ஏப்ரல் 30, இரவு 7.30 மணி, ராஜஸ்தான் ராயல்ஸ் V மும்பை இந்தியன்ஸ், டிஒய் பாட்டில் மைதானம், மும்பை.

மே 6, இரவு 7.30 மணி, குஜராத் டைட்டன்ஸ் V மும்பை இந்தியன்ஸ், ப்ராபோர்ன் மைதானம் மும்பை.

மே 9, இரவு 7.30 மணி, மும்பை இந்தியன்ஸ் V கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டிஒய் பாட்டில் மைதானம், மும்பை.

மே 12, இரவு 7.30 மணி, சென்னை சூப்பர் கிங்ஸ் V மும்பை இந்தியன்ஸ், வான்கடே மைதானம் மும்பை.

மே 17, இரவு 7.30 மணி, மும்பை இந்தியன்ஸ் V சன்ரைசர்ஸ் ஐதராபாத், வான்கடே மைதானம் மும்பை.

மே 21, இரவு 7.30 மணி, மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ் V வான்கடே மைதானம், மும்பை.

mumbai

மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:
ஐபிஎல் 2022 தொடரில் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணி விபரம் இதோ:
ரோகித் சர்மா (கேப்டன் – 16 கோடி), ஜஸ்பிரித் பும்ரா (12 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி), கிரண் பொல்லார்ட் (6 கோடி), இஷான் கிஷான் (15.25 கோடி), டிம் டேவிட் (8.25 கோடி), ஜோபிரா ஆர்ச்சர் (8 கோடி), தேவால்டு ப்ரேவிஸ் (3 கோடி), டேனியல் சம்ஸ் (2.6 கோடி), திலக் வர்மா (1.7 கோடி), முருகன் அஷ்வின் (1.6 கோடி), ட்யமல் மில்ஸ் (1.5 கோடி), ஜெயதேவ் உனட்கட் (1.3 கோடி), ரிலே மெரிடித் ( 1 கோடி), பாபின் ஆலன் (75 லட்சம்), மயங் மார்கண்டே (65 லட்சம்), சஞ்சய் யாதவ் (50 லட்சம்), அர்ஜுன் டெண்டுல்கர் (30 லட்சம்), பசில் தம்பி (30 லட்சம்), அர்ஷத் கான் (20 லட்சம்), அன்மோல்ப்ரீட் சிங் (20 லட்சம்), ராமந்தீப் சிங் ( 20 லட்சம்), ராகுல் பௌதீ (20 லட்சம்), ஹ்ரித்திக் ஷாக்கீன் (20 லட்சம்), ஆர்யன் ஜுயல் (20 லட்சம்)

இதையும் படிங்க : எனக்கு ஐ.பி.எல்-ல விட இதுதான் முக்கியம். ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறவும் தயார் – ரஷீத் கான் அதிரடி

ஐபிஎல் 2022 தொடருக்கான உத்தேச 11 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி இதோ:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிசான் (கீப்பர்), சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட்*, கிரண் பொல்லார்ட்*, சஞ்சய் யாதவ், டானியல் சம்ஸ்*, முருகன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ்/ரிலே மெரிடித்*. (*=வெளிநாட்டு வீரர்கள்)

Advertisement