இந்த 3 ஐ.பி.எல் அணிகள் எங்கு விளையாடினாலும் கலைகட்டும். அவ்ளோ பேன்ஸ் – டேவிட் வார்னர் வியப்பு

Warner
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் முதல் கோப்பையை வெல்ல வேண்டுமென்ற எண்ணத்துடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் தனது கடைசி லீக் போட்டியில் வென்றால் 4-வது இடத்தைப் பிடிக்கலாம் என்ற சூழ்நிலையில் தொடர் தோல்விகளால் கடைசி இடத்தைப் பிடித்த மும்பையிடம் தோல்வியடைந்தது. அதனால் 5-வது இடம் பிடித்த பெங்களூருவுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்த அந்த அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது. அதனால் முதல் கோப்பையை வெல்ல வேண்டுமென்ற அந்த அணியின் கனவு மீண்டும் கனவாகவே போனது.

- Advertisement -

டெல்லியில் வார்னர்:
அந்த அணிக்கு இந்த வருடம் 6.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் நாட்டுக்காக விளையாடியதால் ஆரம்பத்தில் 3 போட்டிகளை தவற விட்ட நிலையில் பங்கேற்ற எஞ்சிய 12 போட்டிகளில் 5 அரை சதங்கள் உட்பட 432 ரன்களை 48.00 என்ற சிறப்பான சராசரியில் 150.52 என்ற சூப்பரான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து சிறப்பாக செயல்பட்டார்.

கடந்த 2014 முதல் 2021 வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ரன் மழை பொழிந்து 3 ஆரஞ்சு தொப்பிகளை வென்று கேப்டனாக 2016இல் சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொடுத்த அவரை கடந்த வருடம் சுமாராக செயல்பட்டார் என்ற காரணத்துக்காக பாதியிலேயே கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய அந்த அணி நிர்வாகம் பெஞ்சில் அமர வைத்து இறுதியில் கழற்றிவிட்டு அவமானப்படுத்தியது.

David Warner DC

இருப்பினும் மனம் தளராத அவர் ஆஸ்திரேலியா வென்ற 2021 டி20 உலக கோப்பை தொடர் நாயகன் விருதை வென்று தனது ஐபிஎல் பயணத்தை 2009இல் தொடங்கிய டெல்லி அணியில் மீண்டும் தற்போது தொடங்கியுள்ளார். அதிலும் பயிற்சியாளர்களாக ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான்கள் ரிக்கி பாண்டிங் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் இடம் பிடித்துள்ள டெல்லி அணியில் 2013க்கு பின்பு மீண்டும் விளையாடியதை பற்றி அவர் மனம் திறந்துள்ளார்.

- Advertisement -

விரும்பி விளையாடினேன்:
தற்போது ஐபிஎல் தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பியுள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “டெல்லியில் எனது நேரங்களை மிகவும் மகிழ்ச்சியாக விரும்பினேன். பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உட்பட நிறைய தெரிந்த முகங்கள் இருந்தனர். அது ஆஸ்திரேலிய வீரர்களுடன் சொந்த மண்ணில் விளையாடுவதை போன்ற உணர்வை கொடுத்தது.

David Warner

கேப்டனாக ரிஷப் பண்ட் உட்பட நிறைய இளம் முகங்களும் இருந்தன. சுவாரஸ்யம் மிகுந்த இளம் வீரரான அவர் டெல்லியை சிறப்பாக 2020 முதல் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். அந்த அணியில் ஒரு பகுதியாக இருந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.

- Advertisement -

கடந்த பல வருடங்களாக ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவருக்கு அங்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அத்துடன் இந்த ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முழுவதும் மும்பை நகரில் மட்டுமே நடந்தது. அதன் காரணமாக டெல்லி அணிக்காக நீண்ட வருடங்கள் கழித்து முதல் முறையாக விளையாடியபோது ரசிகர்களின் அதே ஆதரவு இருந்ததா என்ற கேள்விக்கு அவர் பேசியது பின்வருமாறு.

csk fans

“அது அளப்பரியது. 3 குறிப்பிட்ட அணிகள் உள்ளன – மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ். அவர்கள் எங்கு விளையாடினாலும் அந்த மைதானம் உங்களது சொந்த அணியின் மைதானமாக இருந்தாலும் அதிலுள்ள ரசிகர்கள் அவர்களுக்கு சாதகமாக ஆதரவளிக்கின்றனர். எனவே நீங்கள் அதற்கு எதிராக இருக்கிறீர்கள். மேலும் அவர்களுக்கு எதிராக நீங்கள் அடிக்கடி வர விரும்ப மாட்டீர்கள்” என்று கூறினார்.

- Advertisement -

மாஸ் ரசிகர்கள்:
அதாவது மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய அணிகளுக்கு ஐபிஎல் தொடரில் உள்ள எஞ்சிய அணிகளை காட்டிலும் ரசிக பட்டாளங்கள் எக்கச்சக்கமாக உள்ளதாக தெரிவிக்கும் டேவிட் வார்னர் அந்த அணிகள் விளையாடும் போது அந்தப் போட்டி நடைபெறும் மைதானம் ஒரு குறிப்பிட்ட அணிக்கு சொந்தமாக இருந்தாலும் கூட எதிரணியாக அந்த 3 அணிகளும் விளையாடினால் அவர்களுக்குத்தான் ரசிகர்கள் ஆதரவளிப்பதாக வியப்பாக பேசினார்.

CskvsMi

எடுத்துக்காட்டாக டெல்லியின் பிளே ஆப் வாய்ப்பு பறிபோன மும்பை – டெல்லி அணிகள் மோதிய போட்டியில் வான்கடே மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் டெல்லி தோற்க வேண்டும் என்பதால் மும்பை மற்றும் பெங்களூருவுக்கு ஆதரவளித்தார்கள்.

இதையும் படிங்க : அடிக்குற அடியை பாத்தா கப்பே இவங்களுக்கு தான் போல.. பெங்களூரு அணியை கிழித்து தொங்கவிட்ட ராஜஸ்தான் – தரமான சம்பவம

அதேபோல் வான்கடே மைதானத்தில் டெல்லி – சென்னை அணிகள் மோதும் போது தங்களுக்கு ஆதரவு அளிக்காமல் சென்னைக்கு தான் பெரும்பாலான ரசிகர்கள் ஆதரவு அளித்ததாக வியப்பாக பேசினார். மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகள் முறையே 5 மற்றும் 4 கோப்பைகளை வென்றுள்ளது என்பதுடன் அந்த அணிகளில் ரோகித் சர்மா, எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகிய 3 உச்சபட்ச இந்திய நட்சத்திரங்கள் விளையாடுவதே அதற்கு முக்கிய காரணமாகும்.

Advertisement