13 ஆண்டுகளாக தொடரும் சோகம்.. மும்பை அணியை வாட்டி வதைக்கும் முதல் போட்டி – விவரம் இதோ

MI vs CSK
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணிகளான சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியானது இதுவரை தலா ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி எப்போது நடைபெற்றாலும் அந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டிருக்கும்.

13 ஆண்டுகளாக மும்பை அணிக்கு தொடரும் சோகம் :

அந்த வகையில் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சிஎஸ்கே அணியின் முதல் போட்டியே மும்பை அணிக்கு எதிராக நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அனியானது நான்கு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி இந்த தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

- Advertisement -

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சி.எஸ். அணியானது 19.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சேப்பாக்கம் மைதானத்தில் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் சி.எஸ்.கே நேற்று மும்பை அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது ரசிகர்களின் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் எதிர்புறம் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்த தோல்வியுடன் சேர்த்து 13 ஆண்டு காலமாக ஒரு மோசமான நிலையை ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே சந்தித்து வருவது குறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை அணி சென்னை அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தது. அதற்கு அடுத்து தொடர்ந்து 13 ஆண்டுகளில் தாங்கள் விளையாடிய சீசனின் முதல் போட்டியில் மும்பை அணி தோல்வியையே சந்தித்து வந்துள்ளது.

இதையும் படிங்க : 24 வயது இளம் வீரருக்கு பாராட்டு.. தீபக் சஹரை ஜாலியாக பேட்டால் அடித்த தல தோனி.. காரணம் என்ன?

இப்படி 13 ஆண்டு காலமாக முதல் போட்டியில் அந்த அணி தோல்வி அடைந்து வந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணியானது ஐந்து முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது. இந்த ஆண்டு மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் அந்த அணி பல்வேறு மாற்றங்களையும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement