24 வயது இளம் வீரருக்கு பாராட்டு.. தீபக் சஹரை ஜாலியாக பேட்டால் அடித்த தல தோனி.. காரணம் என்ன?

MS Dhoni
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 23ஆம் தேதி நடைபெற்ற 3வது லீக் போட்டியில் மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 156 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 31, கேப்டன் சூரியகுமார் 29, தீபக் சஹர் 28* ரன்கள் எடுத்தனர்.

அடுத்ததாக விளையாடிய சென்னை அணிக்கு சிவம் துபே உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் கேப்டன் ருதுராஜ் அதிரடியாக 53 (26) ரன்கள் குவித்து நல்லத் துவக்கத்தை கொடுத்தார். அதைப் பயன்படுத்தி மறுபுறம் நங்கூரமாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 65* (45) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

தீபக் சஹர் சேட்டை:

அதனால் 19.1 ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்த சென்னை முதல் வெற்றியைப் பெற்று இத்தொடரை வெற்றிகரமாக துவங்கியது. மறுபுறம் மும்பை அணிக்கு அதிகபட்சமாக விக்னேஷ் புதூர் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. முன்னதாக இந்தப் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வந்த தீபக் சஹார் மும்பை அணிக்காக விளையாடினார்.

2018 – 2024 வரையிலான காலகட்டங்களில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி 3 கோப்பைகளை வெல்ல உதவிய அவர் இம்முறை ஏலத்தில் மும்பை அணிக்காக வாங்கப்பட்டார். இருப்பினும் சென்னை அணியுடனான நட்பை மறக்காத அவர் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்ய வந்ததும் அவரது அருகில் சென்று “கமான் ஜடேஜா, கமான் ஜடேஜா” என்ற வகையில் கைதட்டி ஜாலியாக கடுப்பேற்றும் வகையில் வரவேற்றார்.

- Advertisement -

பாராட்டிய தோனி:

அதற்கு ஜடேஜா தன்னுடைய பேட்டால் ஓங்கி தீபக் சஹர் தலையில் அடிப்பது போல் சென்று உடனே நிறுத்தி ஜாலியான பதிலடி கொடுத்தார். அதோடு நிற்காத தீபக் சஹர் அடுத்ததாக பேட்டிங் பேட்டிங் செய்ய வந்த தோனியின் அருகே சென்று அதே போல கைதட்டி “கமான் தல கமான் தல” என்ற வகையில் ஜாலியாக வரவேற்றார். ஆனால் அப்போது ஜடேஜா போல தோனி எந்த ரியாக்சன் கொடுக்கவில்லை.

இதையும் படிங்க: இதை மிஸ் பண்ணிட்டோம்.. ருதுராஜ் வெற்றியை பறிச்சுட்டாரு.. தோனி பாராட்டிய விக்னேஷ் பற்றி சூர்யகுமார் பேட்டி

அதனால் அங்கிருந்து சென்ற சஹார் போட்டி முடிந்ததும் கை கொடுக்க வந்த போது அவருடைய பின்பக்கத்தில் தம்முடைய பேட்டால் தோனி லேசாக அடித்து ஜாலியான பதிலடி கொடுத்தார். மேலும் போட்டியின் முடிவில் சிஎஸ்கே அணிக்கு 3 விக்கெட்டுகளை எடுத்து பெரிய சவாலைக் கொடுத்த இளம் மும்பை வீரர் விக்னேஷ் புதூர் தோளில் தட்டிக் கொடுத்து தோனி பாராட்டினார். அவருடைய பாராட்டல் விக்னேஷ் நெகிழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement