2017-க்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி சந்திச்ச மிக மோசமான தோல்வி – அடப்பாவமே இவங்களுக்கா இப்படி?

Mumbai-Indians
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 35-ஆவது லீக் போட்டியானது நேற்று இரவு அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது மும்பை அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

GT vs MI 1

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை குவித்தது. பின்னர் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் காரணமாக 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி படுமோசமான தோல்வியை தழுவியது. இப்படி குஜராத் அணிக்கு எதிராக அடைந்த தோல்வி மும்பை அணியின் மிக மோசமான சாதனைக்கும் இட்டுச் சென்றுள்ளது.

Ishan-Kishan

இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாக திகழும் மும்பை அணி எப்போதுமே தோல்வியை எளிதில் எதிரணிக்கு விட்டுக் கொடுக்காது. அந்த வகையில் கடந்த 2017-ஆம் ஆண்டிற்கு பிறகு மும்பை அணி 50-க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைவது இதுவே முதல் முறை.

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக பலம் வாய்ந்த பேட்டிங் ஆர்டர் கொண்ட அணியாக பார்க்கப்படும் மும்பை அணி தோற்பது என்பதே கடினமான விடயம். அதிலும் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்பது எல்லாம் நடக்காமல் இருந்து வந்த வேளையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

இதையும் படிங்க : GT vs MI : ஒரு நாளைக்கு 2 மணிநேரம் பிராக்டீஸ் பண்றாரு. அவரே எங்க டீமின் பெஸ்ட் பினிஷர் – ஹார்டிக் பாண்டியா புகழாரம்

இப்படி குஜராத் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற தோல்வியானது அந்த அணியின் ரசிகர்களிடையே வருத்தத்தை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மும்பை அணியில் பேட்ஸ்மேன்கள் பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் பந்துவீச்சில் மும்பை அணி பலவீனமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement