GT vs MI : ஒரு நாளைக்கு 2 மணிநேரம் பிராக்டீஸ் பண்றாரு. அவரே எங்க டீமின் பெஸ்ட் பினிஷர் – ஹார்டிக் பாண்டியா புகழாரம்

Pandya-and-Abhinav
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

GT vs MI

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலாவதாக பேட்டிங் செய்ய களமிறங்க குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை குவித்தது. குஜராத் அணி சார்பாக துவக்க வீரர் சுப்மன் கில் 56 ரன்களையும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான டேவிட் மில்லர் 46 ரன்களையும், அபினவ் மனோகர் 42 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Abhinav Manohar

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கேப்டன் ஹார்டிக் பாண்டியா அபினவ் மனோகரை பற்றி புகழ்ந்து பேசியிருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் : அபினவ் மனோகர் கடினமாக உழைத்து வருகிறார். ஒவ்வொரு நாளும் அவர் இரண்டு மணி நேரம் வலைப்பயிற்சியின் போது பேட்டிங் பயிற்சியை கடினமாக செய்து வருகிறார். அவரது திறனே அதிரடியாக விளையாடுவது மற்றும் பவர் ஹிட்டிங் தான்.

- Advertisement -

அதனை அவர் சரியாக செய்து வருகிறார். தற்போதைய நிலையில் எங்களது அணியில் சிறந்த அதிரடி வீரர் என்றால் அது அபினவ் மனோகர் தான். கடைசி கட்டத்தில் அவர் களமிறங்கும் போது நிச்சயம் பவுலர்களை தனது அதிரடியால் திணற வைத்து வருகிறார். கடந்த ஆண்டு அவரிடம் சில குறைகள் இருந்தன. அதனை சரியாக கண்டறிந்த அவர் தற்போது அவரது ஆட்டத்தை முன்பை விட மெருகேற்றி உள்ளார். எனவே இந்த ஆண்டு அவர் மிகவும் அதிரடியாக விளையாடி வருவதாக கேப்டன் பாண்டியா புகழாரம் சூட்டினார்.

இதையும் படிங்க : அப்டி என்ன பண்ணிட்டாருன்னு அவர செலக்ட் பண்ணிருக்கீங்க? தேர்வுக்குழுவை விளாசும் முரளி கார்த்திக் – ரசிகர்கள் அதிருப்தி

நேற்றைய போட்டியில் குஜராத் அணி 207 ரன்களை குவித்த போது இறுதி கட்டத்தில் களமிறங்கிய அபினவ் மனோகர் 21 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 42 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement