கடந்த 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் கொண்டுவரப்பட்ட ஹார்டிக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். மும்பை அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஹார்டிக் பாண்டியாவை கேப்டனாக மாற்றுகிறோம் என்று நிர்வாகம் அறிவித்திருந்த வேளையில் அவரது தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி 2024 ஆம் ஆண்டு பத்தாம் இடத்தை பிடித்து வெளியேறியது.
மும்பை அணியிலிருந்து நீக்கப்படும் ஹார்டிக் பாண்டியா :
அந்த தொடர் முடிந்த கையோடு ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது தவறு என்று மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கொந்தளித்தனர். அதற்கடுத்து கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐபிஎல் தொடரில் ஓரளவு சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் நடைபெற்று வரும் இந்த 2026 ஐ.பி.எல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 வெற்றிகளை மட்டுமே பெற்று ஒன்பதாவது இடத்தை பிடித்து வெளியேறியது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் மீதும் ஹார்திக் பாண்டியாவின் மீதும் ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்தனர். அதோடு ஹார்டிக் பாண்டியாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற கருத்துக்களையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இவ்வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகத்திற்கும் ஹார்டிக் பாண்டியாவிற்கும் இடையே சரியான புரிதல் இல்லை என்று தெரிகிறது. அதோடு பயிற்சியாளர்களுக்கும் ஹார்திக் பாண்டியாவுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதினால் அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதோடு கேப்டன் பதவியை மட்டும் இல்லாமல் அவரை மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விடுவிக்க மும்பை அணி தீவிர ஆலோசனைகளை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க : அசரப்பட்டு வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்த வாய்ப்பை குடுத்தா தப்பா போயிடும் – ஆகாஷ் சோப்ரா வார்னிங்
பேட்டிங் மற்றும் பவுலிங் என ஹார்டிக் பாண்டியா இரண்டிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த ஆண்டு மும்பை அணிக்கு அவர் பெரியளவில் கை கொடுக்கவில்லை என்பதனால் அவரை அணியிலிருந்து வெளியேற்ற நிர்வாகம் முடிவு செய்யலாம் கூறப்படுகிறது. ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹார்டிக் பாண்டியா நீக்கப்பட்டால் நிச்சயம் பெரிய தொகைக்கு அவரை ஏலத்தில் எடுக்க போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.



