IPL 2023 : அதிக கோப்பை போலவே நாக் அவுட் கிங்கும் நாங்க தான் – சிஎஸ்கே’வின் 11 வருட சாதனையை தூளாக்கிய மும்பை

CSKvsMI
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியன் குஜராத், சென்னை மற்றும் லக்னோ ஆகிய அணிகள் முதல் 3 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் பெங்களூரு தோல்வியடைந்து வெளியேறியதால் 4வது அணியாக ரோகித் சர்மா தலைமையிலான வெற்றிகரமான மும்பை தகுதி பெற்று அசத்தியது. ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் மும்பை கடந்த வருடம் வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் படித்து அவமானத்திற்கு உள்ளானது.

MI vs LSG

- Advertisement -

அந்த நிலைமையில் இந்த சீசனில் பும்ரா, ஆர்ச்சர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறியதால் ஆரம்பத்தில் தடுமாறிய அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 2வது பகுதியில் கடப்பாரை பேட்டிங்கை பயன்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று சிறப்பான கம்பேக் கொடுத்து தங்களை வெற்றிகரமான அணி என்பதை நிரூபித்தது. அதை தொடர்ந்து தோற்றால் வெளியேற வேண்டும் என்ற நிலைமையை கொண்ட எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை எதிர்கொண்ட அந்த அணி பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் மிரட்டலாக செயல்பட்டு 81 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

நாக் அவுட்டின் கிங்:
சொல்லப்போனால் அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் நாக் அவுட் சுற்றாகக் கருதப்படும் பிளே ஆப் சுற்றில் தொடர்ந்து அதிக வெற்றிகளை (7) பதிவு செய்த அணி என்ற சென்னையின் (6) சாதனையை உடைத்த மும்பை புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது 2017 ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற மும்பை குவாலிபயர் 1 போட்டியில் புனேவிடம் தோல்வியை சந்தித்தது. ஆனால் குவாலிபயர் 2 போட்டியில் வென்று மீண்டும் ஃபைனலுக்கு சென்ற மும்பை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் புனேவை தோற்கடித்து 3வது கோப்பையை வென்றது.

CskvsMi

அப்படி அந்த சீசனில் 2 அடுத்தடுத்த பிளே ஆப் போட்டிகளில் வென்ற மும்பை 2018இல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இருப்பினும் 2019 ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற மும்பை குவாலிபயர் 1 போட்டியில் பரம எதிரியான சென்னையை தோற்கடித்து நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அத்துடன் மீண்டும் குவாலிபர் 2 போட்டியில் வென்று ஃபைனலுக்கு வந்த சென்னையை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்து 4வது கோப்பையை வென்றதை யாராலும் மறக்க முடியாது.

- Advertisement -

அந்த வகையில் 4 பிளே ஆப் போட்டிகளில் தொடர்ந்து வென்ற மும்பை 2020 சீசனின் பிளே ஆப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் டெல்லியை தோற்கடித்து நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அத்துடன் குவாலிபயர் 2 போட்டியில் வென்று வந்த டெல்லியை மீண்டும் ஃபைனலில் தோற்கடித்த மும்பை 5வது கோப்பையை வென்றது. அந்த வகையில் தொடர்ந்து 6 பிளே ஆஃப் போட்டிகளில் வெற்றியை பதிவு செய்த மும்பை 2021, 2022 சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறியது.

CSK vs MI

அந்த நிலைமையில் இந்த ஐபிஎல் தொடரில் எலிமினேட்டரில் பெற்ற வெற்றியும் சேர்த்து பிளே ஆஃப் சுற்றில் 7 வெற்றிகளை தொடர்ந்து பதிவு செய்துள்ள மும்பை இந்த புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2010இல் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை முதல் செமி ஃபைனலில் தோற்கடித்து ஃபைனலில் முதல் கோப்பையை வென்ற சென்னை 2011 சீசனில் குவாலிபயர் 1 போட்டியில் பெங்களூருவை வீழ்த்தி மீண்டும் ஃபைனலில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த முதல் அணியாக சரித்திரம் படைத்தது.

இதையும் படிங்க:CSK : ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் தீபக் சாஹர் விளாயாடுவாரா? மாட்டாரா? – விவரம் இதோ

அதை தொடர்ந்து 2012 சீசனில் எலிமினேட்டர் போட்டியில் மும்பையையும் குவாலிபயர் 2 போட்டியில் டெல்லியையும் தோற்கடித்த சென்னை ஃபைனலில் கொல்கத்தாவிடம் தோற்றது. அந்த வகையில் இதற்கு முன் சென்னை ப்ளே ஆப் சுற்றில் அதிகபட்சமாக 6 வெற்றிகளை பதிவு செய்ததே முந்தைய சாதனையாகும். மொத்தத்தில் கோப்பையிலும் நாங்கள் தான் கில்லி நாக் அவுட் சுற்றிலும் நாங்கள் தான் கிங் என்ற வகையில் சென்னையின் மற்றுமொரு சாதனையை மும்பை உடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement