மகளிர் ஐபிஎல் 2024 : மும்பையிடம் ஹாட்ரிக் தோல்வி.. ஒரிஜினல் ஃபார்முக்கு திரும்புவதால் ஆர்சிபி ரசிகர்கள் கவலை

MI VS RCB WPL
- Advertisement -

இந்தியாவில் மகளிர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2024 சீசன் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் மார்ச் 2ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 9, சோபி டேவின் 0, மேக்னா 11 என டாப் ஆர்டர் வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். போதாகுறைக்கு அடுத்ததாக வந்த ரிச்சா கோஸ் 7, சோபி மோலினக்ஸ் 12 ரன்களில் பூஜா வஸ்திரக்கர் வேகத்தில் அவுட்டானதால் 71/5 என ஆரம்பத்திலேயே பெங்களூரு திண்டாடியது.

- Advertisement -

தடுமாறும் பெங்களூரு:
இருப்பினும் 4வது இடத்தில் நங்கூரமாக விளையாடிய நட்சத்திர வீராங்கனை எலிஸ் பெரி பெங்களூருவை காப்பாற்ற போராடினார். அவருடன் ஜோடி சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வேர்ஹம் 27 ரன்களில் அவுட்டானார். இறுதியில் மறுபுறம் தொடர்ந்து அசத்திய எலிஸ் பெரி 5 பவுண்டரியுடன் 44* (38) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் பெங்களூரு 131/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை சார்பில் அதிகபட்சமாக கேப்டன் நட் ஸ்கீவர் மற்றும் பூஜா வஸ்திரகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 132 ரன்களை துரத்திய மும்பைக்கு யாஸ்டிகா பாட்டியா அதிரடியாக 4 பவுண்டரி 2 சிக்சருடன் 31 (15) ரன்கள் விளாசி அபாரமான துவக்கத்தை கொடுத்து அவுட்டானார். அவருடன் மறுபுறம் நிதானமாக விளையாடிய ஹெய்லே மேத்தியூஸ் 26 (21) ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்ததாக வந்த கேப்டன் நட் ஸ்கீவர் 27 (25) ரன்களில் தடுமாறி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இருப்பினும் இலக்கு குறைவாக இருந்த நிலையில் 4வது இடத்தில் வந்து 7 பவுண்டரியை பறக்க விட்ட எமெலியா கெர் 40* (24) ரன்கள் அடித்து ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 15.1 ஓவரிலேயே 133/3 ரன்கள் எடுத்த மும்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்க தவறிய பெங்களூரு பந்து வீச்சிலும் போராடாமலேயே தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: 2 கோப்பை வென்ற மார்க்ரம் கிடையாது.. தங்களுடைய புதிய கேப்டனை அறிவிக்க உள்ள ஹைதராபாத்.. வெளியான தகவல்

சொல்லப்போனால் கடந்த வருடம் களமிறங்கிய 5 போட்டிகளிலும் 5 தோல்விகளை பதிவு செய்த அந்த அணி இந்த வருடத்தின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. அதனால் இம்முறை கோப்பை நமக்கே என்று ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இருந்த நிலையில் அதற்கடுத்த 2 போட்டிகளில் அடுத்தடுத்த 2 தோல்விகளை சந்தித்துள்ள பெங்களூரு தற்போது 4வது இடத்திற்கு சரிந்துள்ளது. மேலும் மகளிர் ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பைக்கு எதிராக விளையாடிய 3 போட்டிகளிலும் தோற்றுள்ள பெங்களூரு ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்துள்ளது. அப்படி தங்களுடைய அணி பழைய ஃபார்முக்கு திரும்புவதால் ஆர்சிபி ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement