54 ரன்ஸ்.. 5க்கு 5.. லக்னோவை ஓடவிட்ட மும்பை சரித்திர சாதனை வெற்றி.. மலிங்காவை முந்தி பும்ரா வரலாற்று சாதனை

MI vs LSG
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27ஆம் தேதி மும்பையில் 45வது போட்டி நடைபெற்றது. மதியம் 3.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 215-7 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு ரோஹித் சர்மா 12, திலக் வர்மா 6, கேப்டன் பாண்டியா 7 ரன்கள் எடுத்தனர்.

இருப்பினும் துவக்க வீரர் ரியான் ரிக்கல்ட்டன் 58 (32), வில் ஜேக்ஸ் 29 (21) ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் அதிரடியாக வெளுத்து வாங்கிய நம்பிக்கை நாயகன் சூரியகுமார் யாதவ் அரை சதத்தை அடித்து 54 (29) ரன்கள் குவித்தார். அதை வீணடிக்காமல் நமன் திர் 25* (11), கோர்பின் போஸ் 20 (10) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர்.

- Advertisement -

மும்பை மிரட்டல்:

லக்னோ அணிக்கு அதிகபட்சமாக மயங் யாதவ் 2, ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்கள். அடுத்து விளையாடிய லக்னோவுக்கு ஐடன் மார்க்கம் 9 (11) ரன்களில் பும்ரா வேகத்தில் அவுட்டானார். அடுத்ததாக வந்த நிக்கோலஸ் பூரான் அதிரடியாக விளையாட முயற்சித்த போது 27 (15) ரன்னில் அவுட்டாக்கிய வில் ஜேக்ஸ் அதற்கடுத்ததாக வந்த கேப்டன் ரிஷப் பண்ட்டை 4 (2) ரன்னில் காலி செய்தார்.

அதே போல மறுபுறம் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த மிட்சேல் மார்ஷை 34 (24) ரன்னில் பெவிலியன் அனுப்பிய ட்ரெண்ட் போல்ட் மிடில் ஆர்டரில் வெற்றிக்கு போராடிய ஆயுஸ் பதோனியையும் முக்கிய நேரத்தில் 35 (22) ரன்னில் காலி செய்தார். இறுதியில் டேவிட் மில்லர் 24 (16), அப்துல் சமத் 2 (4) ரன்களில் அவுட்டாக்கிய பும்ரா ஃபினிஷிங் செய்ய விடாமல் போட்டியை முடித்தார்.

- Advertisement -

பும்ரா சாதனை:

அதனால் 20 ஓவரில் 161க்கு ஆல் அவுட்டான லக்னோ 10 போட்டிகளில் 5வது தோல்வியை பதிவு செய்தது. மறுபுறம் 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பைக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4, போல்ட் 3, வில் ஜேக்ஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் 150 வெற்றிகளைப் பெற்ற முதல் அணி என்ற சரித்திரத்தை மும்பை படைத்தது.

இதையும் படிங்க: 215 ரன்ஸ்.. ரெய்னாவை முந்தி சூரியகுமார் அதிரடி சாதனை.. ஆரஞ்சு தொப்பியுடன் உத்தப்பா தனித்துவ சாதனை சமன்

இதையும் சேர்த்து கடைசி 5 போட்டிகளில் 5 வெற்றிகள் உட்பட 6வது வெற்றியைப் பெற்ற மும்பை புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்றை நெருங்கியுள்ளது. இந்தப் போட்டியையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ஜஸ்ப்ரித் பும்ரா: 173*
2. லசித் மலிங்காவை: 170
3. ஹர்பஜன் சிங்: 127

Advertisement