MI vs GT : தனி ஒருவனாக ரன்ரேட்டை நிறுத்தி மாஸ் காட்டிய ரசித் கான் – போராடி வென்ற மும்பை, பிளே ஆஃப் சான்ஸ் உறுதியானதா?

MI vs GT Rashid Khan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் மே 12ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 57வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியன் குஜராத்தை 4வது இடத்தில் இருக்கும் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கி மும்பைக்கு 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் ரோகித் சர்மாவை 3 பவுண்டரி 2 சிக்சருடன் 29 (19) ரன்களில் காலி செய்த ரசித் கான் அதே ஓவரின் 5வது பந்தில் மறுபுறம் 4 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடி காட்டிய இசான் கிசானையும் 31 (20) ரன்கள் செய்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய நேஹல் வதேரா 15 (17) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் மறுபுறம் ஏற்கனவே களமிறங்கியிருந்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் தமது பாணியில் முதல் பந்திலிருந்தே அதிரடியாக மைதானத்தின் அனைத்து திசைகளிலும் வெளுத்து வாங்கி விரைவாக ரன்களை சேர்த்தார். குறிப்பாக எப்படி போட்டாலும் அடித்த அவர் ரசித் கான் உள்ளிட்ட யாருக்குமே கட்டுக்கடங்காமல் தொடர்ந்து சரவெடியாக விளையாடி சதத்தை நெருங்கினார்.

- Advertisement -

அந்த நிலையில் அவருடன் 4வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்து அசத்திய விஸ்ணு வினோத் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 30 (20) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த டிம் டேவிட் 5 (3) ரன்களில் அவுட்டானார். ஆனாலும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய சூரியகுமார் 20வது ஓவரின் கடைசி பந்தில் சிக்சருடன் தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை அடித்து மொத்தமாக 11 பவுண்டரி 6 சிக்சருடன் 103* (49) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிசிங் கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் மும்பை 218/5 ரன்கள் எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக ரசித் கான் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை துரத்திய குஜராத்துக்கு வழக்கத்திற்கு மாறாக தடுமாறிய ரித்திமான் சகா 2 (5) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 (3) ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார். போதாக்குறைக்கு மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில்லும் 6 (9) ரன்களில் அவுட்டானதால் ஏற்பட்ட சரி செய்ய முயற்சித்த விஜய் சங்கர் 6 பவுண்டரியுடன் 29 (14) ரன்களில் பியூஸ் சாவ்லா சுழலில் சிக்கினார். அந்த நிலைமையில் இளம் வீரர் அபினவ் மனோகரும் 2 (3) ரன்களில் ஆட்டமிழந்ததால் 55/5 என ஆரம்பத்திலேயே சரிந்த குஜராத்தை நம்பிக்கை நட்சத்திரங்கள் டேவிட் மில்லர் – ராகுல் திவாடியா ஆகியோர் காப்பாற்ற போராடினர்.

- Advertisement -

அதில் 6வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41 (26) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் தடுமாறிய ராகுல் திவாட்டியாவும் 14 (13) ரன்களில் நடையை கட்டினார். ஆனால் அந்த சமயத்தில் களமிறங்கிய ரசித் தான் ஆனதாகட்டும் பார்த்துக் கொள்வோம் என்ற வகையில் பேட்டை அனைத்து புறங்களிலும் சுழற்றி சரவெடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார்.

இருப்பினும் எதிர்புறம் அதிரடி காட்டுவதற்கு பேட்ஸ்மேன் இல்லாததால் அவர் 3 பவுண்டரி 10 சிக்ஸருடன் 79* (32) ரன்களை தனி ஒருவனாக எடுத்தும் 20 ஓவர்களில் குஜராத்தை ரன்களுக்கு 191/8 கட்டுப்படுத்தி 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மும்பை சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மாத்வால் 3 விக்கெட்டுகளையும் பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

- Advertisement -

முன்னதாக இப்போட்டியில் ரசித் கான், நூர் அஹமத் ஆகிய ஸ்பின்னர்களை தவிர்த்து வேகப்பந்து வீச்சாளர்கள் சூரியகுமாரை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கி குஜராத்தின் வெற்றியை பாதி முடித்தனர். எஞ்சிய வெற்றி 55/5 என சரியும் அளவுக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மும்பையின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் இறுதியில் ரசித் கான் போராடியும் பறிபோனது.

இதையும் படிங்க:MI vs GT : தனி ஒருவனாக ரன்ரேட்டை நிறுத்தி மாஸ் காட்டிய ரசித் கான் – போராடி வென்ற மும்பை, பிளே ஆஃப் சான்ஸ் உறுதியானதா?

இருப்பினும் 100 – 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டிய குஜராத்துக்கு போராடிய அவர் ரன்ரேட் (+0.761) சரியாமல் பார்த்துக் கொண்டதுடன் மும்பைக்கு கிடைக்க வேண்டிய கூடுதல் ரன்ரேட்டை (-0.117) தூளாக்கி வெறும் வெற்றியை மட்டுமே கொடுத்தார். அதனால் குஜராத் முதலிடத்தில் நீடிக்கும் நிலையில் 7வது வெற்றியை பதிவு செய்த மும்பை 3வது இடத்திற்கு முன்னேறி 80% பிளே ஆஃப் சுற்றுவாய்ப்பை தக்க வைத்துள்ளது.

Advertisement