12 ரன்ஸ் 3 ரன் அவுட்.. டெல்லியை சாய்த்த மும்பை.. 2008க்குப்பின் 17 வருடங்கள் கழித்து தனித்துவ வெற்றி

Mi vs dc 2
- Advertisement -

ஐபிஎல் 2025 தொடரில் ஏப்ரல் 13ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 29வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டெல்லி டாஸ் வென்று மும்பைக்கு எதிராக முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கி 20 ஓவரில் அதிரடியாக செயல்பட்டு 205-5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரியான் ரிக்கல்டன் 41, சூரியகுமார் யாதவ் 40, திலக் வர்மா 59, நமன் திர் 38* ரன்கள் அடுத்து அசத்தினார்கள்.

டெல்லிக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 2, விப்ராஜ் நிகாம் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய டெல்லிக்கு தீபக் சஹர் வேகத்தில் முதல் பந்திலேயே ஜேக் பிரேசர் கோல்டன் டக் அவுட்டானார். அடுத்து வந்த கருண் நாயர் அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து சிறப்பாக விளையாடிய அபிஷேக் போரல் 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து டெல்லியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.

- Advertisement -

மும்பை அசத்தல்:

ஆனால் அப்போது அபிஷேக் போரல் 33 (25) ரன்களில் கரன் சர்மா காலி செய்தார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அரை சதத்தை அடித்து போராடிய கருண் நாயர் 89 (40) ரன்னில் சான்ட்னர் சுழலில் விக்கெட்டை இழந்தது பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஏனெனில் அடுத்து வந்த கேப்டன் அக்சர் படேல் 9, ராகுல், ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 1 ரன்னில் அவுட்டாக்கி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

இருப்பினும் கடைசி நேரத்தில் விப்ராஜ் நிகாம் அதிரடியாக 14 (8) ரன்கள் எடுத்ததால் வெற்றியை நெருங்கிய டெல்லிக்கு 19வது ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய 19வது ஓவரின் முதல் 3 பந்துகளில் 0, 4, 4 ரன்கள் எடுத்த அசுட்டோஸ் சர்மா 4வது பந்தில் 17 ரன்னில் ரன் அவுட்டானார்.

- Advertisement -

2008க்குப்பின் வெற்றி:

அடுத்ததாக வந்த குல்தீப் யாதவ், மோஹித் சர்மா கடைசி 2 பந்துகளில் ரன் அவுட்டானார்கள். அதனால் 19 ஓவரில் டெல்லியை 193 ரன்களுக்கு சுருட்டிய மும்பை 12 ரன்கள் வித்தியாசத்தில் தங்களுடைய இரண்டாவது வெற்றியைப் பெற்றது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 17 வருடங்கள் கழித்து ஒரே ஓவரில் 3 ரன் அவுட் செய்த வெற்றியைப் பெற்ற 2வது அணியாக மும்பை சாதனையும் படைத்துள்ளது.

இதையும் படிங்க: 1100 கிராம்.. 21 வயது வீராங்கனைக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய பாண்டியா.. இந்தியாவுக்காக வாழ்த்து

இதற்கு முன் 2008ஆம் ஆண்டு இதே மும்பையில் மும்பைக்கு எதிராக பஞ்சாப் கடைசி ஓவரில் 3 ரன் அவுட்டை செய்து வெற்றியை பெற்றது. அதனால் புள்ளிப்பட்டியலிலும் 7வது இடத்திற்கு முன்னேறிய அந்த அணிக்கு கரன் சர்மா 3, மிட்சேல் சான்ட்னர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். மறுபுறம் தோல்வியே சந்திக்காமல் 4 வெற்றிகளைப் பெற்ற டெல்லி இந்தப் போட்டியில் முதல் தோல்வியை சந்தித்தது.

Advertisement