1100 கிராம்.. 21 வயது வீராங்கனைக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய பாண்டியா.. இந்தியாவுக்காக வாழ்த்து

Hardik Pandya
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் பாண்டியா தலைமையில் விளையாடி வருகிறது. அந்த அணி ஏப்ரல் 13ஆம் தேதி டெல்லி அணியை அதனுடைய சொந்த மண்ணில் மும்பை எதிர்கொண்டது. அந்தப் போட்டிக்கு முன்பாக 21 வயது இளம் இந்திய வீராங்கனை காஸ்வி கௌதமுக்கு ஏற்கனவே சொன்னது போல பேட்டை பரிசாகக் கொடுத்தார்.

அதாவது கடந்த மகளிர் ஐபிஎல் 2025 தொடர் பிப்ரவரி – மார்ச் மாதம் நடைபெற்றது. அந்தத் தொடரில் குஜராத் அணிக்காக காஸ்வி கௌதம் விளையாடினார். அப்போது மும்பைக்கு எதிராக குஜராத் விளையாடிய போட்டியை ஹர்திக் பாண்டியா நேரில் பார்க்க வந்தார். அந்தப் போட்டியின் முடிவில் ஹர்திக் பாண்டியாவை சந்திக்கும் காஸ்வி வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

பாண்டியாவின் பரிசு:

குறிப்பாக “இவர் உங்களுடைய மிகப்பெரிய ரசிகை. இவர் உங்களைப் போலவே விளையாட முயற்சிக்கிறார்” என்று ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லி சக வீராங்கனை ஹர்லீன் தியோல் அவரை அறிமுகப்படுத்தினார். அதற்கு அப்படியா? சிறப்பாக விளையாடுங்கள் என்று சொன்ன பாண்டியா அந்த இளம் வீராங்கனையை பாராட்டினார். அப்போது எனக்கு உங்களுடைய பேட் ஒன்று பரிசாக வேண்டும் என்று பாண்டியாவிடம் அந்த வீராங்கனைக் கேட்டுக்கொண்டார்.

அதை ஏற்றுக்கொண்ட ஹர்திக் பாண்டியா அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது பரிசாக பேட்டை கொடுக்கிறேன் என்று சொன்னார். அந்த சூழ்நிலையில் இந்தப் போட்டிக்கு முன்பாக காஸ்வியை ஹர்திக் பாண்டியா சந்தித்தார். அந்த சந்திப்பின் போது ஏற்கனவே கொடுத்த வாக்கின் படி காஸ்விக்கு தனது பேட்டை பாண்டியா பரிசாக கொடுத்தார்.

- Advertisement -

ஸ்பெஷல் பேட்:

சொல்லப்போனால் இளம் வீராங்கனை விளையாடுவதற்கு தகுந்தார் போல் 1100 கிராம் எடையுடன் ஸ்பெஷல் பேட்டை வாங்கி தம்முடைய கையெழுத்தை போட்டு பாண்டியா பரிசாக வழங்கினார். மேலும் “இந்தியாவுக்காக விளையாட அறிமுக வாய்ப்பை பெற்றுள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள். எப்படி உணர்கிறீர்கள்? அனைத்தும் நலமா?”

இதையும் படிங்க: அஸ்வினை பெஞ்சில் வெச்சா தான் இதை செய்வாரு.. நினைச்சதுக்கு எதிரா சிஎஸ்கே மாறிடுச்சு.. ஸ்ரீகாந்த் விளாசல்

“இந்தப் பேட்டை பயன்படுத்தி விளையாடுங்கள். வேறு ஏதேனும் தேவைப்பட்டால் சொல்லுங்கள். இந்தியாவுக்காக நன்றாக விளையாடுங்கள்” என்று கை கொடுத்து பாண்டியா வாழ்த்தினார். அதைப் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்ட காஸ்வி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பாண்டியா கொடுத்த பேட்டில் வரும் இலங்கை – தென்னாப்பிரிக்கா முத்தரப்பு தொடரில் காஸ்வி இந்தியாவுக்காக விளையாட உள்ளார்.

Advertisement