284 ஸ்ட்ரைக் ரேட்டில் வெறித்தனமாக போராடிய ஸ்டப்ஸ்.. டெல்லியை வீழ்த்திய மும்பை.. உலக சாதனை வெற்றி

MI vs DC 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 7ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 20வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.

அதே போல இஷான் கிசான் எனது பங்கிற்கு அதிரடியாக விளையாடினார். அந்த வகையில் 80 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த இந்த ஜோடியில் ரோகித் சர்மா 49 (27) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமாக சென்றார். அப்போது வந்த சூரியகுமார் யாதவ் கம்பேக் போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்த சில ஓவரில் மறுபுறம் விளையாடிய இஷான் கிசானும் 42 (23) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சாதனை வெற்றி:
அதற்கடுத்ததாக வந்த திலக் வர்மா 6 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதே போல மறுபுறம் தடுமாற்றமாக விளையாடிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 39 (33) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் கடைசி நேரத்தில் வந்த டிம் டேவிட் அதிரடியாக 45* (21) ரன்கள் குவித்தார். அவரை விட அன்றிச் நோர்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்ட ரொமாரியா செஃபார்ட் 32 ரன்கள் குவித்து மொத்தமாக 39* (10) ரன்கள் விளாசி மாஸ் ஃபினிஷிங் கொடுத்தார்.

அதனால் 20 ஓவரில் மும்பை 234/5 ரன்கள் எடுத்த நிலையில் டெல்லி சார்பில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜே 2, அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 235 என்ற கடினமான இலக்கை துரத்திய டெல்லிக்கு ஆரம்பத்திலேயே டேவிட் வார்னர் 10 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் பிரிதிவி ஷா அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

குறிப்பாக அடுத்ததாக வந்த அபிஷேக் போரேலுடன் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக விளையாடிய அவர் அரை சதமடித்து 66 (40) ரன்கள் எடுத்திருந்த போது பும்ராவின் அற்புதமான யார்க்கரில் கிளீன் போல்டானார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் போராடிய அபிஷேக்கும் 41 (31) ரன்களில் பும்ரா வேகத்தில் நடையை கட்டினார்.

அப்போது வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 1 (3) ரன்னில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். இருப்பினும் இளம் வீரர் ட்ரிஷன் ஸ்டப்ஸ் டெத் ஓவர்களில் சரவெடியாக விளையாடி 19 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு வெற்றிக்கு வெறித்தனமாக போராடினார். ஆனால் எதிர்ப்புறம் அவருக்கு அக்சர் பட்டேல் 8, லலித் யாதவ் 3, குசாக்ரா 0 ரன்களில் அவுட்டாகி கை கொடுக்கத் தவறினர்.

இதையும் படிங்க: 4, 6, 6, 6, 4, 6.. ஒரே ஓவரில் 32 ரன்ஸ்.. செஃபார்ட் மாஸ் சாதனை.. ரோஹித் அதிரடியில் டெல்லியை தெறிக்க விட்ட மும்பை

அதனால் ட்ரிஷன் ஸ்டப்ஸ் 3 பவுண்டரி 7 சிக்ஸருடன் 71* (25) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 205/8 ரன்களுக்கு டெல்லியை கட்டுப்படுத்தி 29 ரன்கள் வித்யாசத்தில் வென்ற மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி 4, பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் ஹாட்ரிக் தோல்விகளுக்கு பின் முதல் வெற்றியை பதிவு செய்து மும்பை நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. அத்துடன் இதையும் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் 150 வெற்றிகளை பதிவு செய்த முதல் அணியாகவும் மும்பை உலக சாதனை படைத்துள்ளது. 2வது இடத்தில் சென்னை 148 வெற்றிகளுடன் உள்ளது.

Advertisement