நீயும் போகக்கூடாது! பிளே ஆஃப் பந்தயத்தில் சென்னையை வாரிய மும்பை – ஆனாலும் சென்னைதான் கெத்து

MI vs CSK Ms Dhoni Rohit Sharma
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் பிளே ஆஃப் சுற்றில் விளையாடப் போகும் அணிகளை தீர்மானிக்கும் முக்கியமான 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த மும்பை இந்தியன்ஸ் 8 தொடர் தோல்விகளால் முதல் அணியாக கடந்த வாரமே லீக் சுற்றுடன் அதிகாரபூர்வமாக வெளியேறியது. அந்த நிலைமையில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்க எஞ்சிய 9 அணிகள் போட்டி போட்டு வந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் 9 வெற்றிகளால் 14 புள்ளிகளால் முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

CSK Ms DHoni

- Advertisement -

அதை தொடர்ந்து எஞ்சிய 3 இடங்களுக்கு 8 அணிகள் போட்டி போட்டு வரும் நிலையில் பெரும்பாலான அணிகள் தங்களது வாழ்வா – சாவா போட்டியில் வென்று பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டே வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் ஜடேஜா தலைமையில் முதல் 4 போட்டிகளில் தோல்வியடைந்த போதே நடப்பு சாம்பியன் சென்னையின் பிளே ஆஃப் கனவு பாதி பறிபோனது.

நீயும் போகக்கூடாது:
இருப்பினும் கேப்டன்ஷிப் அழுத்தத்தால் பேட்டிங் பவுலிங்கில் சொதப்பிய ஜடேஜா அந்த பதவியை வேண்டாம் என்று மீண்டும் எம்எஸ் தோனியிடமே வழங்கினார். அதனால் 4 கோப்பைகளை வென்று கொடுத்த தோனி கேப்டனாக திரும்பியதும் ஒருசில பெரிய வெற்றிகளை சுவைத்த சென்னை கடைசி 3 போட்டிகளில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை அதிர்ஷ்டத்தின் உதவியுடன் 3 சதவீதமாக வைத்திருந்தது. அந்த நிலைமையில் கடைசியாக நடைபெற்ற முக்கியமான போட்டியில் பரம எதிரியான மும்பை எதிர்கொண்ட அந்த அணி பேட்டிங்கில் படுமோசமாக செயல்பட்டு வெறும் 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

MI vs CSK

வான்கடே மைதானத்தில் நடந்த அப்போட்டியில் ஆரம்பத்திலேயே எல்பிடபிள்யூ முறையில் கோல்டன் டக் அவுட்டான டேவோன் கான்வே அதை ரிவியூ செய்தபோது பவர்கட் என்பதால் ரிவியூ செய்ய முடியாது என அம்பயர் பதிலளித்து பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அதனால் பெரிய சர்ச்சை ஏற்பட்ட நிலையில் ராயுடு, மொய்ன் அலி என அனைத்து முக்கிய வீரர்களும் வரிசையாக மும்பையின் அபார பந்துவீச்சில் பெவிலியன் திரும்பியதா அந்த அணி 50 ரன்களை கூட தாண்டாது என எதிர்பார்க்கப்பட்டது. நல்லவேளையாக கேப்டன் தோனி 36* (33) ரன்கள் அடித்து ஓரளவு காப்பாற்றினார். அதன்பின் எளிய இலக்கை துரத்திய மும்பைக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து சென்னை பவுலர்கள் நெருக்கடி கொடுத்த போதிலும் 14.5 ஓவரில் 103/5 ரன்களை எடுத்த அந்த அணி வென்றது.

- Advertisement -

வெளியேற்றிய மும்பை:
அதனால் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பு பறிகொடுத்த மும்பை பங்கேற்ற 12 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்து ஆறுதலடைந்தது. அதைவிட 3% வாய்ப்புடன் பிளே ஆப் சுற்றுக்கு செல்லலாம் என்ற கனவுடனும் நப்பாசையுடனும் நம்பிக்கையுடன் சுற்றி வந்த சென்னைக்கு பெரிய தோல்வியை பரிசளித்த மும்பை “முதலில் வெளியேறிய என்னுடன் 2-வதாக நீயும் வா, ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டுக்கு போகலாம்” என்ற வகையில் 2-வது அணியாக ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுடன் அதிகாரபூர்வமாக வெளியேற்றியது.

MI vs CSK 2

பொதுவாகவே 5 கோப்பைகளை வென்ற மும்பை 4 கோப்பைகளை வென்ற சென்னையை சமீபத்திய வருடங்களில் கோப்பைக்காக தோற்கடித்ததை பார்த்தோம். அதிலும் 2015, 2017, 2019 ஆகிய வருடங்களில் சென்னையை இறுதிப்போட்டியில் தோற்கடித்த மும்பை அடுத்தடுத்து சாம்பியன் பட்டங்களை வென்று ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக சாதனை படைத்தது. ஆனால் இந்த வருடம் சற்று வித்தியாசமாக பிளே ஆப் பந்தயத்தில் சென்னையை தோற்கடித்த மும்பை மீண்டும் ஒரு வித்யாசமான வெற்றியைக் கண்டுள்ளது.

- Advertisement -

சென்னை கெத்து:
1. இருப்பினும் அதே பிளே ஆப் சுற்று பந்தயத்தில் என்னதான் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என மும்பை சாதனை படைத்திருந்தாலும் 2008, 2009, 2016, 2018, 2021, 2022 என 15 சீசன்களில் அந்த அணி 6 முறை லீக் சுற்றுடன் வெளியேறியது.

இதையும் படிங்க : என்னப்பா உங்க டீம் 97க்கு ஆல் அவுட்டாகிடுச்சு ! ரெய்னாவை கலாய்த்த யுவி – அவரின் பதில் இதோ

2. மறுபுறம் 2016, 2017 தவிர 13 சீசன்களில் பங்கேற்ற சென்னை 2020க்கு பின் வரலாற்றில் வெறும் 2-வது முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியுள்ளது.

3. 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2018, 2019, 2021 ஆகிய வருடங்களில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று 9 முறை பைனலுக்கு சென்று 4 சாம்பியன் பட்டங்களை வென்று 2-வது வெற்றிகரமான அணியாக சென்னை சாதனை படைத்துள்ளது. எனவே மொத்தம் பங்கேற்ற 13 சீசன்களில் 11 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நாக் – அவுட் சுற்று என்று வரும்போது மும்பையை விட பன்மடங்கு உயர்ந்த அணி என்பதில் சந்தேகமில்லை.

Advertisement