ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வுபெற்ற கைரன் பொல்லாடிற்கு மிகப்பெரிய பொறுப்பு – கவுரவித்த நிர்வாகம்

Kieron-Pollard-1
- Advertisement -

ஐபிஎல் தொடரில் கடந்த 2010-ஆம் ஆண்டு அறிமுகமாகிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான கைரன் பொல்லார்டு கடந்த 13 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 189 போட்டிகளில் விளையாடி 3,412 ரன்களையும், 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மும்பை அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக திகழ்ந்து வந்தார். மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்ற 5 சீசன்களிலும் மும்பை அணியில் இடம் பிடித்திருந்த அவர் முக்கிய வீரராக தொடர்ச்சியாக அணியில் இடம் பெற்று வந்தார். ஆனால் கடந்த ஆண்டு ஆறு கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்ட அவர் 11 போட்டிகளில் விளையாடி 144 ரன்கள் மட்டுமே குவித்ததன் காரணமாக அவரது இந்த மோசமான பார்ம் காரணமாக இந்த ஆண்டு அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Kieron-Pollard

- Advertisement -

இதன் காரணமாக அடுத்த சீசனில் வேறு ஒரு அணிக்காக அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கைரன் பொல்லார்டு இன்று ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை ஒன்றினை வெளியிட்டார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : நான் இன்னும் சில ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி இருக்க முடியும். ஆனால் அணியின் நிர்வாகத்தினர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

மேலும் இது குறித்து அவர்கள் என்னிடம் பேசியதால் நான் என்னுடைய இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய நான் எப்பொழுதுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே ஓய்வு பெற நினைத்தேன். மீண்டும் ஒருமுறை என்னால் மும்பை அணியை எதிர்த்து எந்த ஒரு அணியிலும் இணைந்து விளையாட முடியாது என்பதன் காரணமாகவே நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தவாறு தற்போது ஓய்வை அறிவித்துள்ளேன் என்ற உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார்.

Kieron-Pollard

இந்நிலையில் மும்பை அணிக்காக கடந்த பல ஆண்டு காலமாக தனது சிறப்பான பங்களிப்பினை வழங்கி வந்த பொல்லார்டுக்கு தற்போது மும்பை அணியின் நிர்வாகம் பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பை கொடுத்து அவரை கவுரவித்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள மும்பை அணியின் உரிமையாளர் நீதா அம்பானி கூறுகையில் : மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மூன்றாவது சீசனில் இருந்து பொல்லார்டு அளித்த பங்களிப்பு எங்களால் என்றுமே மறக்க முடியாத ஒன்று.

- Advertisement -

ஐந்து முறை மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்ற போதும் அவர் அணியில் இருந்துள்ளார். இனிமேல் அவருடைய மேஜிக்கை நாங்கள் தவறவிட இருக்கிறோம். ஆனாலும் அவர் MI எமிரேட்ஸ் அணிக்காக தொடர்ச்சியாக ஒரு கிரிக்கெட் வீரராகவும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் பயணிப்பார். அவரது இந்த புதிய பயணத்திற்கு வாழ்த்துக்கள்.

Kieron Pollard 1

எங்களுடன் அவர் எப்பொழுதுமே தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவருக்கு இந்த பதவியை வழங்கி உள்ளதாக நீதா அம்பானி குறிப்பிட்டுள்ளார். மேலும் பொல்லார்டு குறித்து பேசிய மற்றொரு உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறுகையில் : மும்பையின் இந்தியன்ஸ் அணிக்காக மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்த பொல்லார்டு அவருடைய சாதனைகளை ஒரு லெகசியாக மும்பை அணியிடம் விட்டுச் சென்றுள்ளார்.

- Advertisement -

மைதானத்தில் அவர் பீல்டிங் செய்யும்போது ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் மும்பை இந்தியன்ஸ் அணியை ஆதரித்து கத்தும் சத்தத்தை தவற விடுவோம். மும்பை அணிக்காக ஒரு மதிப்புமிக்க வீரராக இருந்த ஒரு குடும்ப உறுப்பினரை நாங்கள் இனி தவற விட இருக்கிறோம்.

இதையும் படிங்க : உங்களால் தான் ப்ளேயர்ஸ் ஃபிக்சிங்ல பண்றாங்க, தோல்விக்கு பின் பாக் வாரியத்தை விளாசி மியான்தத் ஓப்பனாக பேசியது என்ன

ஆனாலும் அவர் இனி ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுவார் அதேபோன்று MI எமிரேட்ஸ் அணிக்காக அவர் ஒரு வீரராகவும் தொடர்வார் என ஆகாஷ் அம்பானி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement