ஹார்டிக் பாண்டியா ஆப்சென்ட்.. முதல் போட்டிக்கான கேப்டனை அறிவித்த மும்பை இந்தியன்ஸ் – ரோஹித் கிடையாது

Pandya MI
- Advertisement -

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கோலாகலமாக துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் போட்டிக்கான கேப்டனை அறிவித்த மும்பை இந்தியன்ஸ் :

அதற்கு அடுத்து மார்ச் 23-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற இரண்டு அணிகளான இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் முழு வேகத்துடன் தயாராகி வருகின்றனர். இவ்வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

ஏனெனில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது மூன்று முறை ஸ்லோ ஓவர் ரேட் விதிமுறையால் பாதிப்பினை சந்தித்த பாண்டியாவுக்கு 30% அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதியில் விதிக்கப்பட்ட இந்த தடை இந்த முதல் போட்டியில் அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக தற்போது மும்பை அணி முதல் போட்டியில் யாரை கேப்டனாக நியமிக்கும்? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சூரியகுமார் யாதவே முதல் போட்டிக்கான கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வ பதிவை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பத்திரிகையாளர் சந்திப்பில் ஹர்திக் பாண்டியா கலந்து கொண்டு பேசியபோது :

இதையும் படிங்க : டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காகவும் தியாகியாக மாறிய கே.எல் ராகுல்.. உண்மையிலேயே பெரிய மனசு தான் – விவரம் இதோ

முதல் போட்டியில் நான் இல்லை என்றால் சூரியகுமார் யாதவ் தான் அணியை வழ நடத்துவார். இந்திய அணியையே அவர் வெற்றிகரமாக அழைத்து செல்லக்கூடியவர். அதனால் நிச்சயம் அவர்தான் முதல் போட்டிக்கான கேப்டனாகவும் இருப்பார் என்று கூறியிருந்த வேளையில் தற்போது சூரியகுமார் யாதவே முதல் போட்டிக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement