- Advertisement -
ஐ.பி.எல்

வெற்றிகரமான அணிகள் மும்பை, சென்னை கடைசில இருப்பது நல்லது தான்! வில்லங்கமாக பேசும் முன்னாள் வீரர்

ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 2-வது வரத்தைக் கடந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெற்று வரும் இந்த தொடரில் வரும் மே 22-ஆம் தேதிவரை நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட தொடரில் அபாரமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. தற்போதைய நிலைமையில் ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் போன்ற அணிகள் புள்ளிப் பட்டியலில் டாப் 4 இடங்களைப் பிடித்து வெற்றிநடை போட்டு வருகின்றன.

அதேபோல் இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் கூட அடுத்தடுத்த வெற்றிகளுடன் டாப் 6 இடங்களுக்குள் நல்ல நிலைமையில் விளையாடி வருகின்றன. ஆனால் நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த மும்பை, சென்னை புள்ளிப் பட்டியலில் கடைசி 2 இடங்களில் திண்டாடுவதை பார்ப்பவர்களுக்கு பரிதாபம் தான் ஏற்படுகிறது எனக் கூறலாம்.

- Advertisement -

தடுமாறும் மும்பை – சென்னை:
ஏனெனில் மற்ற அணிகளை காட்டிலும் இந்த 2 அணிகள் மட்டும் ஒவ்வொரு வருடமும் மலைபோல வெற்றிகளை குவித்து வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரை எடுத்துள்ளன. அதிலும் இதுவரை நடைபெற்றுள்ள 14 ஐபிஎல் தொடர்களில் மும்பை 5 கோப்பைகள் சென்னை 4 கோப்பைகள் என இவ்விரு அணிகள் மட்டும் 9 கோப்பைகளையும் வென்று எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகின்றன.

அதிலும் 4 கோப்பைகளை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் 4 போட்டிகளில் தோற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்திருந்த நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவுக்கு எதிராக நடந்த 5-வது போட்டியில் அதிரடியாக செயல்பட்டு முதல் வெற்றியை பதிவு செய்தது. அதன் காரணமாக 9-வது இடத்தில் இருந்த மும்பையை பின்னுக்கு தள்ளி 2 பொன்னான புள்ளிகளைப் பெற்றுள்ள சென்னை தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து நிம்மதி அடைந்தது. அந்த வகையில் சென்னையை போலவே பஞ்சாப்புக்கு எதிராக நேற்று நடந்த தனது 5-வது போட்டியில் மும்பையும் வெற்றி பெறும் என எதிர்பார்த்து அனைவருக்கும் மீண்டும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

- Advertisement -

சொதப்பும் மும்பை:
ஏனென்றால் வென்றே தீரவேண்டும் என்ற நிலையில் பஞ்சாப் நிர்ணயித்த 199 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை 186/9 ரன்களை மட்டுமே எடுத்து போராடி தோல்வி அடைந்தது. அதன் காரணமாக 2014-க்கு பின் மீண்டும் தனது முதல் 5 போட்டிகளில் தோல்வியை பதிவு செய்த மும்பை ஐபிஎல் வரலாற்றில் 2 சீசன்களில் 5 தொடர் தோல்விகளை சந்தித்த ஒரே அணி என்ற பரிதாப சாதனையை படைத்ததுடன் தொடர்ந்து 10-வது இடத்தில் தள்ளாடி வருகிறது. இந்நிலையில் வெற்றிகரமான ஐபிஎல் அணிகளாக விளங்கும் சென்னையும் மும்பையும் புள்ளி பட்டியலின் கடைசி இடங்களில் திண்டாடுவது சரிதான் என்று முன்னாள் இந்திய அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

இது பற்றி நேற்று மும்பை தோற்ற பின் அவர் பேசியது பின்வருமாறு. “நான் ஏற்கனவே கூறியதை தான் இப்போதும் கூறுகிறேன். வெற்றிகரமான பணக்கார ஐபிஎல் அணிகளை புள்ளிப் பட்டியலின் கடைசியில் விடுங்கள். மும்பையும் சென்னையும் புள்ளி பட்டியலின் கடைசி இடங்களில் சிறப்பாக காட்சியளிக்கின்றன. பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் 2 ரன் அவுட்களுக்கு பின் மும்பை வெற்றி பெறுவது கடினமாகிவிட்டது” என்று கூறினார்.

- Advertisement -

வில்லங்கமான பேச்சு:
அதாவது ஏற்கனவே நிறைய கோப்பைகளையும் சரித்திர சாதனை வெற்றிகளையும் மும்பையும் சென்னையும் அடுத்தடுத்து பெற்று ஒரு பணக்கார அணிகளை போல் உள்ளதாக கூறும் வீரேந்திர சேவாக் மறுபுறம் பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் போன்ற அணிகள் காலம் காலமாக விளையாடிய போதிலும் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாமல் ஏழையைப் போல தோன்றுவதாக தெரிவித்தார்.

எனவே எப்போதும் ஒருதலைப்பட்சமாக இல்லாமல் புதிய சாம்பியன் இம்முறை உருவாகினால் அது ஐபிஎல் தொடருக்கும் நல்லது என்று அவர் கூறியுள்ளார். வெற்றிகரமான அணிகள் தடுமாறும் இந்த நிலையில் இதுவரை கோப்பைகளை வெல்லாத அணிகள் சிறப்பாக செயல்பட்டு இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோப்பையை முத்தமிடுவதற்கு இதுவே சரியான தருணம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : இப்படியும் ஸ்டம்ப்பை உடைக்க முடியுமா ! ராஜஸ்தானை சாய்த்து மாஸ் காட்டும் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ்

அவரின் இந்த பேச்சு நியாயமானது என்றாலும் மும்பை, சென்னை ஆகிய அணிகளின் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த காலங்களில் டெல்லி, பெங்களூரு போன்ற அணிகள் சிறப்பாக செயல்பட தவறிய நிலையில் தங்களது அணிகள் சிறப்பாக செயல்பட்ட காரணத்தாலேயே கோப்பைகளை வென்றது எனக்கூறும் அவர்கள் இதைப் பார்க்கும்போது மும்பை மற்றும் சென்னை மீது சேவாக்க்கு லேசான பொறாமை உள்ளதை காட்டுவதாகக் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -
Published by