இப்படியும் ஸ்டம்ப்பை உடைக்க முடியுமா ! ராஜஸ்தானை சாய்த்து மாஸ் காட்டும் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ்

Hardik Pandya Stumps
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற்ற 24-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நவி மும்பையில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய குஜராத்க்கு தொடக்க வீரர் மேத்யூ வேட் 12 (6) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த விஜய் சங்கர் 2 (7) ரன்களில் நடையை கட்டியதால் 15/2 என ஆரம்பத்திலேயே தடுமாறியது. அந்த நிலையில் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் சுப்மன் கில் 13 (14) ரன்களில் அவுட்டானதால் 55/3 என்ற சுமாரான தொடக்கம் பெற்ற குஜராத்தை அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அவருக்கு உறுதுணையாக இளம் வீரர் அபினவ் மனோகர் அதிரடி காட்டியதால் 4-வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி தங்களது அணியை வலுவான நிலையை எட்ட வைத்தது. இதில் 28 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 43 ரன்கள் எடுத்திருந்தபோது அபினவ் மனோகர் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மாஸ் காட்டிய பாண்டியா:
ஆனால் மறுபுறம் தொடர்ந்து ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை பந்தாடிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 52 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர் உட்பட அரைசதம் கடந்து 87* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் கடைசி நேரத்தில் பட்டையை கிளப்பிய டேவிட் மில்லர் 14 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 31* ரன்கள் எடுத்து மிரட்டலான பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழந்த குஜராத் 192 ரன்கள் எடுத்தது.

அதை தொடர்ந்து 193 என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் முதல் பந்திலிருந்தே அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்தார். குறிப்பாக மற்றொரு தொடக்க வீரர் தேவதூத் படிக்கல் 1.6 வது ஓவரில் முதல் பந்தை சந்தித்து கோல்டன் டக் அவுடட்டாவதற்கு முன்பாகவே 28 ரன்களை பறக்க விட்ட அவருக்கு ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் அடுத்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 8 (8) ரன்கள் எடுத்து கம்பெனி கொடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ராஜஸ்தான் தோல்வி:
அந்த அளவுக்கு ஆரம்பத்திலேயே பட்டையை கிளப்பிய ஜோஸ் பட்லர் 24 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 54 ரன்களை விளாசி பவர் பிளே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 11 (11) ரன்களிலும் ராசி வேன் டர் டுஷன் 6 (10) ரன்களிலும் நடையை கட்ட 90/5 என தடுமாறிய ராஜஸ்தானின் தோல்வி 10-வது ஓவரிலேயே உறுதியானது. இறுதியில் சிம்ரோன் ஹெட்மையர் தனது வழக்கமான அதிரடியில் 17 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த ரியன் பராக் 18 (16), ஜிம்மி நீசம் 17 (15) போன்ற வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் 20 ஓவர்களில் 155/9 ரன்களை மட்டுமே எடுத்த ராஜஸ்தான் தோல்வி அடைந்தது.

குஜராத் சார்பில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதன் காரணமாக 37 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியை பெற்ற குஜராத் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. மறுபுறம் பந்துவீச்சில் கடைசி நேரத்தில் சொதப்பிய ராஜஸ்தான் பேட்டிங்கிலும் சொதப்பியதால் இதுவரை பங்கேற்ற 5 பட்டியலில் 2-வது தோல்வியை பதிவு செய்தாலும் 3 வெற்றிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

- Advertisement -

ஸ்டம்ப்டை தெறிக்கவிட்ட பாண்டியா:
இப்போட்டியில் குஜராத்தின் வெற்றிக்கு பேட்டிங்கில் 87* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் பினிஷெராகவும் பந்துவீச்சில் 2.3 ஓவர்களில் 1 விக்கெட்டுக்கும் எடுத்து முக்கிய பங்காற்றிய கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த தொடருக்கு முன்பதாக உள்ளூர் கிரிக்கெட்டில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத அவர் தலைமையில் குஜராத் எங்கே வெற்றி பெறப்போகிறது என அனைவரும் நினைத்தனர். ஆனால் அந்த கணிப்புகளை பொய்யாக்கிய அவர் ஒரு நல்ல கேப்டனாகவும் ஆல்ரவுண்டராகவும் தனது அணியை வெற்றி நடை போட வைத்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்க வைத்துள்ளது அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

அதைவிட நேற்றைய போட்டியில் பட்லர் அவுட்டான பின் 65/3 என ராஜஸ்தான் தடுமாறிய நிலையில் களமிறங்கிய அதன் கேப்டன் சஞ்சு சாம்சனை பெரிய ரன்களை எடுக்கவிடாமல் ரன் அவுட் செய்த ஹர்திக் பாண்டியா மிடில் ஸ்டம்பை தெறிக்க விட்டு உடைத்தார். பொதுவாகவே ஜஸ்பிரித் பும்ரா, நடராஜன் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் தான் 140 கி.மீ யார்கர் பந்துகளை வீசி ஸ்டம்பை உடைப்பார்கள்.

இதையும் படிங்க : அவருக்காகவா இவரை டீம்ல இருந்து இவரை தூக்குனீங்க? விஜய் ஷங்கரை விளாசும் ரசிகர்கள் – என்ன நடந்தது?

ஆனால் இப்போட்டியில் ஹர்திக் பாண்டியா ஒரு பீல்டராக அதுவும் ரன் அவுட் செய்யும்போது மின்னல் வேகமாக பந்தை எறிந்து ஸ்டெம்பை பதம் பார்த்து உடைத்ததை பார்த்த ரசிகர்கள் “என்ன ஒரு வேகம்” என வியக்கிறார்கள்.

Advertisement