இப்போதுள்ள வீரர்களில் சிறந்த 2 பவுலர் மற்றும் 2 பேட்ஸ்மேன் இவங்க தான் – மெக்ராத் பேட்டி

Mcgrath
- Advertisement -

ஆஸ்ரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மெக்ராத் 1993 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 563 விக்கெட்டுகளையும், 250 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 381 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Glenn-McGrath

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஆல் டைம் பெஸ்ட் பவுலரான இவர் தற்போது சமகால கிரிக்கெட்டில் தலைசிறந்த 2 பவுலர்கள் மற்றும் 2 பேட்ஸ்மேன்கள் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மெக்ராத் கூறுகையில் : என்னை பொறுத்தவரை பும்ரா மற்றும் ரபாடா ஆகியோர் இன்றைய காலகட்டத்தில் மிகச்சிறந்த இரண்டு பாஸ்ட் பவுலர்கள் என்று தெரிவித்தார்.

ஏனெனில் பும்ரா மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை போல நீண்ட தூரம் ஓடி வந்து வீசுவது கிடையாது. குறைந்த தூரமே ஓடிவந்து நல்ல வேகத்தில் வீசுகிறார். அவரின் பந்துவீச்சு அசாத்தியமானது மேலும் அதே போன்ற ரபாடாவும் சிறப்பாக பந்து வீசுகிறார். அவரது பெரிய ரசிகன் நான் என்று மெக்ராத் கூறினார். அதேபோல் பேட்ஸ்மேன்களை பொறுத்தவரை இந்திய அணி கேப்டன் விராத் கோலி மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சிறந்தவர்கள்.

Rabada

smith

ஸ்மித் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர். அவரிடம் டெக்னிக் இல்லை என்றாலும் அவரது பேட்டிங் விளையாடும் விதம் அபாரமானது. கோலி கிளாஸ் பேட்ஸ்மேன் அவர் டெக்னிகலாக மிகச் சிறந்த பேட்ஸ்மென் மேலும் களத்தில் ஒரு கேப்டனாக ஆக்ரோஷமாக செயல்பட கூடியவர் என்று மெக்ராத் கூறியது குறிப்பிடத்தக்கது

Advertisement