- Advertisement -
ஐ.பி.எல்

துவக்க வீரரான வெங்கடேஷ் ஐயரை பின்வரிசையில் களமிறங்கியது ஏன்? – மெக்கல்லம் கொடுத்த விளக்கம்

ஐபிஎல் தொடரின் 30-வது லீக் போட்டி நேற்று பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பட்லரின் அற்புதமான சதம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் குவித்தது.

பின்னர் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் குவித்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கொல்கத்தா அணி சார்பாக கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 85 ரன்களும் துவக்க வீரர் ஆரோன் பின்ச் 58 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

இந்த போட்டியில் கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் நெருங்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் கொல்கத்தா அணியின் கைக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பை தவற விட்டது என்றே கூறலாம். வழக்கமாக கொல்கத்தா அணியில் துவக்க வீரராக களம் இறங்கி வரும் வெங்கடேஷ் ஐயர் இந்தப்போட்டியில் ஆறாவது வீரராக களம் இறக்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் கூறுகையில் : இந்த போட்டியில் இலக்கு மிகப் பெரியது என்பதனால் துவக்கத்திலேயே அதிரடி தேவைப்பட்டது. அதன் காரணமாகவே ஆரோன் பின்ச் உடன் நாங்கள் சுனில் நரைனை துவக்க வீரராக களமிறங்கினோம். சுனில் நரைன் துவக்க வீரராக களமிறங்கி எப்படிப்பட்ட அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என்பதை நாம் பலமுறை கண்டுள்ளோம்.

- Advertisement -

எனவே இந்த போட்டிக்கு அதிரடியான துவக்கம் வேண்டும் என்பதற்காகவே சுனில் நரேன் துவக்க வீரராக அனுப்பினோம். ஆனால் அதிர்ஷ்டவசமின்றி அவர் ரன் அவுட் ஆனது போட்டியின் துவக்கத்திலேயே எங்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. மேலும் வெங்கடேஷை பின்வரிசையில் களமிறக்கினால் அஸ்வின் மற்றும் சாகல் ஆகியோரது பந்துவீச்சை சமாளித்து அவரால் நிச்சயம் சிறப்பாக விளையாடும் என்கிற காரணத்தினாலேயே அவருக்குப் பின் வரிசையில் வாய்ப்பை வழங்கினோம்.

இதையும் படிங்க : என்னுடைய பவுலிங்கை வெளுத்து வாங்கியது இவர் மட்டும்தான். சுனில் நரேன் கூறும் இந்திய ஜாம்பவான் யார் தெரியுமா?

இந்த போட்டியில் கிட்டத்தட்ட 15 ஓவர்கள் வரை எங்கள் வசம் இருந்த வெற்றிவாய்ப்பு அதன் பின்னர் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுகள் காரணமாக எங்கள் கைகளில் இருந்த வெற்றி வாய்ப்பு இறுதியில் பறிபோனது வருத்தம் என மெக்கல்லம் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by