என்னுடைய பவுலிங்கை வெளுத்து வாங்கியது இவர் மட்டும்தான். சுனில் நரேன் கூறும் இந்திய ஜாம்பவான் யார் தெரியுமா?

- Advertisement -

மும்பை நகரில் அசத்தலாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான 3-வது வாரத்தை கடந்து விறுவிறுப்பான திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வரும் மே 22-ஆம் வரை நடைபெறும் முக்கியமான 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் முதல் வாரத்தில் இருந்தே மல்லுக்கட்டி வருகின்றன.

SRH vs KKR

- Advertisement -

மேஜிக் நாயகன் சுனில் நரேன்:
அந்த வகையில் இந்தத் தொடரில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் வாரத்தில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றாலும் அதன் பின் ஒரு சில தோல்விகளை சந்தித்து இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பெற்று புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் தவிக்கிறது. எனவே ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் 30-ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்ளும் அந்த அணி அதில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் மேல் நோக்கி முன்னேறும் முனைப்பில் களமிறங்க உள்ளது.

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த நம்பிக்கை நட்சத்திர மாயாஜால சுழல்பந்து வீச்சாளர் சுனில் நரேன் கொல்கதாவுக்காக தனது 150-வது ஐபிஎல் போட்டியில் விளையாடி சாதனை படைக்க உள்ளார். ஐபிஎல் போன்ற பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு ரன் மழை பொழியும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நிறைந்த தொடரில் சுழல் பந்துவீச்சாளர்களின் நிலைமை படாதபாடாக உள்ள நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஏபி டிவிலியர்ஸ் போன்ற அனைத்து உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களையும் தனது மாயாஜாலம் நிறைந்த மேஜிக் சுழல்பந்து வீச்சால் சுனில் நரேன் பலமுறை திணறிடித்துள்ளார்.

kuldeep

சரவெடி சேவாக்:
அதிலும் அதிரடி பினிஷர் எனக் கருதப்படும் எம்எஸ் தோனி இவருக்கு எதிராக ஒரு பவுண்டரி கூட அடித்ததே கிடையாது (சமீபத்தில் 1 அடித்துள்ளார்) என்ற புள்ளி விவரம் எல்லாம் அவரின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் எந்த ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக இருந்தாலும் இவரை அதிரடியாக எதிர்கொள்வதற்கு சற்று யோசிப்பார்கள். அந்த அளவுக்கு துல்லியமாக பவுலர்களை அலறவிடும் பேட்ஸ்மேன்களையே அச்சுறுத்தும் ஒரு பவுலராக வலம் வரும் சுனில் நரேன் முன்னாள் இந்திய அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் மட்டுமே தனது பந்துவீச்சை சரமாரியாக அடிக்கும் ஒரு பேட்ஸ்மேன் என்று பாராட்டியுள்ளார்.

- Advertisement -

தனது 150வது மைல்கல் போட்டிக்கு முன்பாக தனது பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த போது அவர் பேசியது பின்வருமாறு. “விரேந்தர் சேவாக் தான் அது போன்ற ஒருவர் என்று கூறுவேன். அவருக்கு எதிராக பந்து வீசுவது கடினமாக எப்போதும் உணர்வேன். ஏனெனில் அவர் போட்டியின் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தமக்கே உரித்தான அதிரடி பாணியில் விளையாடுவார்”

Virender Sehwag

“பொதுவாகவே ஒரு மோசமான பந்தை நான் வீசினால் அதை சிக்ஸராக அடி வாங்குவேன். எனவே நான் ஒரு சிறப்பான பந்தை எப்போதும் வீச வேண்டும். இருப்பினும் சிறப்பான பந்தில் ஒரு பேட்ஸ்மேன் சிக்சர் அடித்தால் அதற்காக அதிகம் நான் கவலைப்படமால் அதே மாதிரியான பந்தை வீசுவேன். ஏனெனில் ஒரே மாதிரியாக அனைத்து நேரமும் பேட்ஸ்மேன்களால் அடிக்க முடியாது. அந்தவகையில் எப்போதுமே நான் எளிமையான திட்டங்களை கையாள்வேன்” என்று கூறினார்.

- Advertisement -

உயிரான கொல்கத்தா:
ஆரோன் பின்ச் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி நிரந்தரமான இடத்தை பிடிக்க முடியாமல் வருடத்திற்கு வருடம் புதிய புதிய அணிகளுக்கு மாறும் இந்த ஐபிஎல் தொடரில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் முறையாக கால்தடம் பதித்த சுனில் நரேன் ஆச்சரியப்படும் வண்ணமாக இதுவரை தொடர்ந்து கொல்கத்தா அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். அந்த அளவுக்கு திறமை வாய்ந்த அவர் ஓய்வு பெறும் வரை கொல்கத்தா அணிக்காக மட்டுமே விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

narine 1

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “இது பற்றி கொல்கத்தா அணி நிர்வாகி வெங்கி மைசூரிடம் கூறியுள்ளேன். எனவே வேறு எந்த ஒரு அணிக்கும் விளையாட வேண்டிய சூழ்நிலை எனக்கு வராது என்று நம்புகிறேன். கொல்கத்தா அணியில் எனது பயணத்தை தொடங்கிய நாள் இதே அணியில் முடிப்பேன் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க : ஒல்லி உடம்பு, அப்போவே சொன்னேன் கேட்கல! பாண்டியாவின் காயத்தை அப்போதே கணித்த பாக் ஜாம்பவான்

ஒரே அணியில் ஒரு வெளிநாட்டு வீரர் விளையாடுவதை நீங்கள் அதிகம் பார்க்க முடியாது. அந்த வகையில் அதிர்ஷ்டம் நிறைந்த நான் தொடர்ந்து கொல்கத்தா அணியில் விளையாடுவேன் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்.

Advertisement